Breaking News

வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்... 204 மனுக்கள்

காஞ்சிபுரத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.


காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (07.11.2022) மாவட்ட ஆட்சித்தலைவர்  டாக்டர்.மா.ஆர்த்தி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையத்தில் பிரதி திங்கட்கிழமை தோறும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்கள் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கி தீர்வு காணப்பட்டு வருகிறது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமை வகித்தார். வருவாய் துறை ஊரக உள்ளாட்சித்துறை, நகராட்சி நிர்வாகத்துறை ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தபட்டோர் நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வேளாண்மை துறை, பொதுப்பணிதுறை, சுகதாரத்துறை, சமூகநலத்துறை, கால்நடைத்துறை, காவல் துறை உள்ளிட்ட அனைத்து துறைகள் சார்ந்த அலுவலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இன்று நடைபெற்ற கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் மற்றும் தேவைகள் அடங்கிய மனுக்களை கூட்டத்தில் வழங்கினார்கள். அம்மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். 

இக்கூட்டத்திற்கு மனு அளிக்க வருகை புரிந்த மாற்றுதிறனாளிகள் அமர்ந்திருந்த இடத்திற்கே சென்று அவர்களிடம் மனுக்கள் பெற்று உரிய அலுவலர்களிடம் கொடுத்து துரித நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தினார். இன்று மட்டும் இக்கூட்டத்தில்  204 மனுக்கள் பெறப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் திரு.கோ.சிவருத்ரய்யா,  ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.பி.ஸ்ரீதேவி, உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.அர்பித்ஜெயின், இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.புண்ணியகோட்டி, துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திருமதி.சுமதி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

 


No comments

Thank you for your comments