Breaking News

ஸ்ரீபெரும்புதூர் திருவள்ளூர் சாலையின் குறுக்கே ராட்சத மரம் விழுந்ததால் போக்குவரத்து துண்டிப்பு.... மெத்தனமாக மீட்பு நடவடிக்கை...

செங்காடு அருகே ஸ்ரீபெரும்புதூர் திருவள்ளூர் சாலையின் குறுக்கே ராட்சத மரம் விழுந்ததால் போக்குவரத்து துண்டிப்பு....



காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த செங்காடு பகுதியில் ஸ்ரீபெரும்புதூர் திருவள்ளூர் சாலையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த தொடர் மலை காரணமாக ராட்சத மரம் ஒன்று வேருடன் சாய்ந்து முறிந்து சாலையின் குறுக்கே விழுந்துள்ளது. இந்த மரம் இபி வயர் மீது விழுந்ததால் ஈபி வயரும் மரத்தோடு சேர்ந்து சாலையின் குறுக்கே கீழே விழுந்துள்ளது.

இதனால் ஸ்ரீபெரும்புதூர் திருவள்ளூர் சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

ஒரு மணி நேரத்திற்கு மேலாக எந்த ஒரு மீட்பு நடவடிக்கையும் நடைபெறாத சூழலில் இரு சக்கர வாகனத்தில் வருகிறவர்கள் ஆபத்தை உணராமல் கீழே கிடக்கின்ற மின் ஒயர் அருகே ஆபத்தான நிலையில் சென்று கொண்டிருந்தனர்.

இந்த போக்குவரத்து துண்டிப்பால் நீண்ட வரிசையில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் காத்துக் கிடந்தன.



மேலும் திருவள்ளூரிலிருந்து ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் பகுதியில் உள்ள பல்வேறு நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் குறித்த நேரத்தில் வேலைக்குச் செல்ல முடியாததால்  அவதியுற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது சாலையின் குறுக்கே விழுந்துள்ள மரத்தை அகற்றும் பணி நடைபெற்று இந்த சாலையில் தற்போது வாகனங்கள் சென்று கொண்டிருக்கின்றன.

No comments

Thank you for your comments