Breaking News

தேங்கிய மழை நீரை வெளியேற்றி போது நிகழ்ந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த ஆட்சியர்...

 காஞ்சிபுரம்:

காஞ்சிபுரத்தில் மின் மோட்டார் மூலம் தேங்கிய மழை நீரை வெளியேற்றும் பணியின் போது  மீண்டும் தேங்கி நிற்கும் இடத்திற்கே நீர் சென்றதால் மாவட்ட ஆட்சியர் அதிர்ச்சி....!

மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சியமே என சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு....!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று அதி கன மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுத்திருந்தது.அதனடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று காலை முதலே கன மழையானது பெய்ய தொடங்கி அவ்வப்போது விட்டு விட்டு மழையானது  பெய்து வருகின்றது.


இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டும்,மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இவ்ஆய்வின் போது காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பிள்ளையார்பாளையம் பகுதியிலுள்ள் லிங்கப்பன் பாளையம் தெருவில் காலையிலிருந்து பெய்த மழையினால் சாலையில் தேங்கி நிற்கும் மழை வெள்ள நீரை சிறிய மின் மோட்டார் முலம்  மாநகராட்சி ஊழியர்கள் வெளியேற்றும் பணியினை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது மின் மோட்டாரை மாநகராட்சி ஊழியர்கள் இயக்கியப்போது மழை நீரை உறிஞ்சும் பகுதியிலிருந்து சரியாக மழை நீரை உறிஞ்ச முடியாததால் அதனுடன் மாநகராட்சி ஊழியர்கள் சில நிமிடங்கள் போராடினர். பின்னர் ஒரு வழியாக மோட்டாரின் ஒரு பகுதியில் பொருத்தப்பட்டிருந்த குழாய் மூலம் மழை வெள்ள நீரானது உறிஞ்சப்பட்டு மற்றொரு நீண்ட குழாய் மூலம் பக்கத்து தெருவிற்கு மழை வெள்ள நீர் வெளியேறுவதற்கு முன்னதாகவே, மழை நீர் தேங்கி நிற்கும் பகுதியின் அருகாமையிலேயே  குழாய்யில் இருந்த ஓட்டை வழியாக மழை வெள்ள நீரானது பீச்சி அடித்துக்கொண்டு வெளியேறி சாலையில் விழுந்தோடி மீண்டும் மழை நீர் தேங்கி நிற்கும் இடத்திற்கே வெளியேறியது.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த  மாவட்ட ஆட்சியர், இவ்வாறு இருந்தால் மழை நீர் எவ்வாறு வெளியேறும், மீண்டும் மழை நீர் தேங்கி நிற்கும் இடத்திலேயே வந்து சேருமென்பதினால் மின் மோட்டாரின் இயக்கத்தை நிறுத்தச் சொல்லுங்கள்,பணியினை சரியாக மேற்கொள்ளுங்கள் என மாநகராட்சி ஆணையாளர் கண்ணனிடம் அவர் தெரிவித்ததை தொடர்ந்து  உடனடியாக மின் மோட்டாரானது நிறுத்தப்பட்டு அப்பணியானது நிறுத்தப்பட்டது. அதன் பின் மாவட்ட ஆட்சியர் வேறு பகுதியிற்கு ஆய்வு மேற்கொள்ள தனது காரில் புறப்பட்டு சென்றார்.

மாவட்ட ஆட்சியரின் திடீர் ஆய்வின் போது மழை நீர் வெளியேற்றும் பணியினை மாநகராட்சி நிர்வாகம் அலட்சியமாகவே கையாண்டுள்ளது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மழை காலங்களில் மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையிற்கு தேவையான மாற்று உபகரணங்கள், பொருட்கள் என அனைத்தையும்  

முறையாக வைத்துக்கொண்டு அப்பணிகளை  முறையாகவும்,சரியாகவும் காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகம்  மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

No comments

Thank you for your comments