Breaking News

உலக கழிவறை தினத்தை முன்னிட்டு உறுதிமொழி மற்றும் நடைபயணம்

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம், தேவரியம்பாக்கம் கிராமத்தில்  உலக கழிவறை தினத்தை முன்னிட்டு இன்று (19.11.2022) சுகாதார நடைபயணம் தேவரியம்பாக்கம் பேரூந்து நிலையம் அருகே உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இருந்து - அரசு உயர்நிலைப் பள்ளி வரை  ஊராட்சி மன்றத் தலைவர் அஜய்குமார் தலைமையில் நடைபெற்றது.




இந்த சுகாதார நடைபயணத்தை வாலாஜாபாத் ஒன்றியக் குழு பெருந்தலைவர் ஆர். கே. தேவேந்திரன், மற்றும் துணைப் பெருந்தலைவர் பா. சேகர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று நடைபயணத்தை தொடங்கிவைத்தனர்.


வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இராஜ்குமார் மற்றும் முத்துசுந்தரம் முன்னிலை வகித்தனர்.  



திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற கிராமமாக திகழ்ந்திடவும்,  கழிவறைகளுக்கு இனி இரண்டு உறிஞ்சி குழிகள் அமைக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும்,

குப்பைகளை வீட்டிலேயே உரமாக்கி வீட்டுத் தோட்டத்திற்கு பயன்படுத்துவது குறித்தும்,  வீட்டிலும், தெருக்களிலும் கழிவுநீர் தேங்காமல் பாதுகாப்பாக அகற்றி நோய் பரவாமல் தடுப்பது குறித்தும், கழிப்பறை பயன்பாடு, திடக்கழிவு மேலாண்மை, திரவக்கழிவு மேலாண்மை மற்றும் நெகிழிப் பொருட்களை தவிர்த்தல் குறித்தும்  விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.  

 மாநகராட்சி அதிகாரிகளின் பெயர் பட்டியலுடன்
 ஊழல்.. லஞ்சம்... அம்பலபடுத்தி கோஷம்...

ஒன்றியக் குழு உறுப்பினர்கள்  அமலிசுதா முனுசாமி மற்றும் உலகநாதன், வட்டார சுகாதார ஆய்வாளர் இராதாகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் தணிகை, வட்டார வளர்ச்சி ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி வார்டு உறுப்பினர்கள் பூபதி, ஞானவேல், கற்பகம் மாதவன், சூரியகாந்தி, சாந்தி, கிராம பிரமுகர்கள் சேஷாத்திரி, நடராஜன், பள்ளி மாணவ மாணவியர், மகளிர் சுயஉதவிக் குழுவினர், சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.






No comments

Thank you for your comments