Breaking News

செம்பரம்பாக்கத்தில் நீர்வரத்து அதிகரித்தாலும் பிரச்சினை இல்லை.. நேரில் ஆய்வு செய்த பின்பு துரைமுருகன் பேட்டி

இன்று(13-11-22) செம்பரம்பாக்கம் ஏரியை  மாண்புமிகு நீர்வளத் துறை அமைச்சர்  திரு .துரைமுருகன் மாண்புமிகு குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு .தா.அன்பரசன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.


தொடர் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகமாக இருப்பதால் மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர்திரு துரைமுருகன் மற்றும் சிறுகுறு  நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு. தா.மோ .அன்பரசன், ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.



ஆய்வுக்கு பின்   மாண்புமிகு நீர்வளத் துறை அமைச்சர் அமைச்சர் கூறியதாவதுசெம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வெளியேறும் உபரி நீரால் எந்த பாதிப்பும் இல்லை என்றும் செம்பரம்பாக்கம் ஏரியை நிமிடத்திற்கு நிமிடம்  கண்காணித்து வருவதால் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும். முகலிவாக்கம் ,மாங்காடு பகுதியில் மழைநீர்பாதிப்பு ஏற்பட செம்பரம்பாக்கம் ஏரி உபரி நீர் காரணம் இல்லை என்றும் பூவிருந்தவல்லி சுற்றுவட்டத்தில் பெய்த மழை நீர் முகலிவாக்கம் வழியாக செல்வதால் சிறிது  பாதிப்பு ஏற்பட்டது நீர் வடிய தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். 

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து எவ்வளவு உபரி நீர் திறந்து விட்டாலும் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லை


மேலும் மழையின் அளவைப் பொறுத்து திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்படும் என்று கூறினார் 24 மணி நேரமும் செம்பரம்பாக்கம் ஏரியை நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்த வருவதால் எவ்வளவு மழை பெய்தாலும் அதிகமான உபரி நீர் திறந்து விட்டாலும் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாது 

இவ்ஆய்வின் போது நீர்வளத்துறை  செயலாளர் திரு.சந்திப் சக்சேனா,இ.ஆ.ப காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்மா.ஆர்த்தி, சட்ட மன்ற உறுப்பினர்.கு. செல்வப்பெருந்தகை மற்றும் தலைமை பொறியாளர் முரளிதரன் முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி செயற் பொறியாளர் திரு. பொதுப்பணி திலகம் உள்ளிட்ட நீர்வளத்துறை பொறியாளர்கள் உடன் உள்ளனர்

No comments

Thank you for your comments