Breaking News

மாட்டுச்சந்தையில் நாற்று நட்டு நூதன போராட்டம்

மதுரை, நவ.13-

மேலூர் மாட்டுச்சந்தையில் மாட்டு வியாபாரிகள் நாற்று நட்டு  நூதன போராட்டம். சேறும் சகதியுமாக இருக்கும் சந்தையை சீரமைக்க மேலூர் நகராட்சிக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.



மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள சந்தப் பேட்டை என்ற இடத்தில் மாடு மற்றும் ஆட்டு ச்சந்தை நடைபெற்று வருகிறது, இங்கு வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில்  மாட்டு சந்தையும், திங்கட்கிழமை ஆடு சந்தையும் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. 


வாரத்தில் இரண்டு நாட்கள் நடைபெறுகின்ற இந்த சந்தை தென் மாவட்ட வியாபாரிகள்,மற்றும் விவசாயிகள்  மத்தியில் மிகவும் பிரபல்யமானதாகும்..

பல்வேறு மாவட்ட பகுதிகளில் இருந்தும் இங்கு நடைபெறும் வாரச்சந்தைக்கு மாடுகளும், ஆடு களும் விற்பனைக்காக கொண்டு வரப்படு கிறது,இதை வாங்கி செல்ல வியாபாரிகள், விவசாயிகள் என ஆயிரக்கணக்கானோர் வாராந்தோறும் இங்கு கூடுவதையொட்டி அதனால் லட்சம், கோடி என குத்தகை ஏலத்திற்கு விடப்பட்டு நகராட்சியின் வளர்ச்சிக்கு பெரும் வருமானத்தை ஈட்டித்தரும் ஒரு முக்கிய அங்கமாக இந்த வாரச்சந்தை இருந்து வருகிறது.


இருந்தபோதிலும் சந்தை நடைபெரும் வளாகம் எந்த ஒரு பராமரிப்பும் இல்லாமல் சேரும் சகதியுமாகவும்,குண்டும் குழியுமாகவும், இருந்து வரும் சூழலில் மேலூர் பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மழை தண்ணீர் சந்தைப் பகுதியில் தேங்கி மேலும் அலங்கோலமாக அறவே சுகாதார மற்ற சூழ லில் துர்நாற்றம் வீசியவாறு காணப்படுகிறது 

இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல் மாட்டு சந்தைக்கு வந்த மாடு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் இதை கண்டு கடும் அதிர்ச்சிக்கு ஆளாகினர். மேலும் கடுமையான ஆவேசத்துடன் சந்தை பகுதியில் நாற்றுகளை நட்டு வைத்து தங்களது ஆதங்கத்தையும், ஆத்திரத்தையும் இவ்வாறு நூதன முறையில் வெளிப்படுத்தினர்,

சிறிய கன்றாக இருந்தாலும் பெரிய மாடாக இருந்தாலும் ஒரு மாட்டிற்கு இவ்வளவு ரூபாய் என நுழைவு கட்டணமாக வசூலிக்கபடுகிறது எனவும் ஆனால் சந்தையில் எந்த ஒரு பராமரிப்பு வேலைகளும் நடைபெறுவதில்லை எனவும்,  மேலும் மழைக்காலம் என்பதாலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கில் வியாபாரிகள்,விவசாயிகள்,பொதுமக்கள் இங்கு வந்து செல்வதாலும், இது போன்ற  சுகாதாரமற்ற சூழலில் நோய்தொற்றுக்கு ஆளாகும் அபாயம் உள்ளதாகவும், அச்சம் தெரிவித்துள்ளனர்

வியாபாரிகள் நகராட்சி நிர்வாகம் சந்தையில் மழை தண்ணீர் தேங்காதவாறு தூய்மைபடுத்தி,குண்டும் குழிகளாகவும், உள்ள தரை தளத்தை உடனடியாக சீர் படுத்தவும் வேண்டும் எனவும் அவர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments

Thank you for your comments