Breaking News

பெங்களூரு மத்திய திரைப்பட பிரிவு தலைமை படதொகுப்பாளர் என். பாலுவிற்கு பணி நிறைவு பாராட்டு விழா

பெங்களூரு, நவ. 1 -

பெங்களூரு மத்திய திரைப்படப் பிரிவு தலைமை படதொகுப்பாளர் என். பாலுவிற்கு பணி ஓய்வு பாராட்டு விழா வெகு சிறப்பாக நடந்தது.

தமிழ்நாடு, திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் தாலுகா, அறிஞர் அண்ணா நகரை சேர்ந்த நாகப்பன் - கன்னியம்மாள் ஆகியோரின் மூத்த மகன் என். பாலு ( 60 ). இவர் சென்னை அடையாறில் உள்ள திரைப்பட கல்லூரியில் 'எடிட்டர்' எனும் தொழில்நுட்பப் பாடப் பிரிவை தேர்வு செய்து படித்துவிட்டு, 1989ம் ஆண்டு புதுடில்லியில் உள்ள மத்திய திரைப்பட பிரிவு  'தூர்தர்ஷனில்' படதொகுப்பாளராக பணியில் சேர்ந்தார்.  

Mr & Mrs Atrocity | MN Jewel Park MD Mr & Mrs Naveen 
 Happy Anniversary   to Mr & Mrs Naveen

பின்னர் பாலு மும்பை, சென்னை ஆகிய மத்திய திரைப்படப் பிரிவு அலுவலகங்களிலும் பணியாற்றிய இவர், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரு மத்திய திரைப்பட அலுவலகத்தில் பணி மாறுதலுடன் வந்த பாலு தலைமை படதொகுப்பாளராக பதவி உயர்வும் பெற்று தொடர்ந்து பணியாற்றி வந்தார்.

2022ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி பாலுவிற்கு பணி காலம் முடிந்து ஓய்வு பெற்றார். இதற்கான பணி  நிறைவு பாராட்டு விழா இங்குள்ள அலுவலக கூட்ட அரங்கில் வெகு சிறப்பாக நடந்தது. 

விழாவிற்கு  பெங்களூரு மத்திய தலைமை பட தயாரிப்பாளர் ( ஓய்வு ) ஏ.எஸ். நாகராஜீ தலைமை தாங்கினார்,  கணக்காய்வாளர் வி. சித்ரா முன்னிலை வகித்தார். தலைமை ஒலிப்பதிவாளர் வி.சுகுமாரன், சென்னை 'பொதிகை டி.வி.,' தலைமை செய்தி ஆசிரியர் ஏ.ராஜவேலு சுமதி, ஓய்வு பெற்ற தலைமை ஒலிப்பதிவாளர் பிரசாத் செளமியா ஆகியோர்  விழா சிறப்புரை ஆற்றினர்.

தலைமை படத் தொகுப்பாளர் பாலுவின் மனைவி சரளா, மகள் விகாசினி, மகன் சர்வேஷ், தாய் மாமன் திருவள்ளூர் மாவட்ட டி.எஸ்.பி., எம்.குமரவேலு மனோரா, சகோதர்கள் என். தண்டபாணி மாதம்மாள், என். குணாளன் விஜயலட்சுமி, என். அன்பு அனித்தா மற்றும் கு.சேதுராமன் உள்ளிட்ட ஏராளமானோர் விழாவில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். தலைமை படத் தொகுப்பாளர் என். பாலு விழா நினைவு பரிசை பெற்றுக் கொண்டு, ஏற்புரையை இனிதே ஏற்றுக் கொண்டார்.











No comments

Thank you for your comments