Breaking News

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக  செயற்குழு கூட்டம் காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.


காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக  செயற்குழு கூட்டம் காஞ்சிபுரம் டி.கே.நம்பி தெருவில் உள்ள கலைஞர் பவள விழா மாளிகை மாவட்ட கழக அலுவலகத்தில்  மாவட்ட அவைத்தலைவர் ச. இனியரசு தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ கலந்துகொண்டு திமுகவினருக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

இக்கூட்டத்தில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர்-உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் அவர்கள் திமுக இளைஞரணி புதிய உறுப்பினர்களை காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் வருகின்ற 27.11.2022 அன்று பிறந்தநாள் காணும் கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாள் விழாவினை எளியோர் எழிச்சி நாள் விழாவாக சிறப்பாக கொண்டாட வேண்டும் எனவும் கழக ஆக்கப்பணிகள் குறித்தும் பல்வேறு ஆலோசனைகளை எடுத்துரைத்தார்.

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட துணை செயலாளர்கள் டி.வி.கோகுலகண்ணன், நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், கு.மலர்விழிகுமார், மாவட்ட பொருளாளர்  சன்பிராண்ட் கே. ஆறுமுகம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.



இக்கூட்டத்தில் கழக மாணவரணி செயலாளர்- காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஆர்.டி.அரசு,காஞ்சிபுரம் மாநகர செயலாளர் சி.கே.வி.தமிழ்செல்வம், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், மற்றும் தலைமை பொதுக்குழு-செயற்குழு உறுப்பினர்கள்,ஒன்றிய-நகர-பேரூர் செயலாளர்கள், மாநில, மாவட்ட கழக அணிகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட திமுகவினர் கலந்துகொண்டனர்.


No comments

Thank you for your comments