Breaking News

+2 படித்த பெண்களுக்கு அரிய வாய்ப்பு... Tata Electronics தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

திருவள்ளுர் :

திருவள்ளுர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக / நகர்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் இணைந்து பெண்களுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் திருவள்ளுர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் வருகின்ற வியாழக்கிழமை 24ஆம் தேதி காலை 9.00 மணியளவில் நடைபெற உள்ளது.

இம்முகாமில் பணி காலியிடங்கள் முழுமையும் பெண் மனுதாரர்களுக்கு மட்டுமே பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

திமுக ஆளுகட்சி பிரதிநிதிகள் தலையீடுகள் அதிகம்..
ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ் பரபரப்பு பேட்டி

இதற்கான கல்வித்தகுதி பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 18 முதல் 26 வயது வரை இருக்க வேண்டும்.  

தேர்வு செய்யப்படும் வேலை நாடுநர்களுக்கு 12 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டு, வேலைநியமனக் கடிதம் வழங்கப்படும். மாத சம்பளம் ரூ.16,577/- வழங்கப்படும். உணவு, தங்கும் இடம் மற்றும் போக்குவரத்து வசதிகள் செய்து தரப்படும். 

இதில் எஸ்சி, எஸ்டி மனுதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தகுதியுள்ள பெண் பணிநாடுநர்கள் தங்களுடைய 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், ஆதார் அட்டை அசல் மற்றும் நகல்களுடன் இம்முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் இத்தனியார் வேலைவாய்ப்பு முகாமில் பணிநியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு இரத்து செய்யப்படமாட்டாது எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

 மாநகராட்சி அதிகாரிகளின் பெயர் பட்டியலுடன்
 ஊழல்.. லஞ்சம்... அம்பலபடுத்தி கோஷம்...

திருவள்ளுர் மாவட்டத்தைச் சார்ந்த 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள் அனைவரும் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ்  தெரிவித்துள்ளார்கள்.


No comments

Thank you for your comments