Breaking News

ஆக்ஸ்போர்ட் பள்ளியில் அறிவியல் அற்புதங்கள் விண்வெளி ராக்கெட் ஏவுதல் செய்முறை பயிற்சி

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஒன்றியம் ஒடுக்கத்தூர் பகுதியில் அமைந்துள்ள ஆக்ஸ்போர்ட் பள்ளியில்    22 நவம்பர் 2022-ல் காலை 10:30 மணி அளவில் அறிவியல் மன்றம் துவக்க விழாவும் அறிவியல் செயல்பாடுகளில் இயற்பியல் வேதியல் உயிரியல் தாவரவியல் கணிதம் மற்றும் அறிவியல் அற்புதங்கள் விண்வெளி ராக்கெட் ஏவுதல் செய்முறை கருத்து




தாள்கள் என பல்வேறு வடிவங்களில் பயிற்சி 300க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு செயல் வடிவத்தில் கொடுக்கப்பட்டது.



இந்நிகழ்ச்சிக்கு ஆக்ஸ்போர்ட் பள்ளியின் தாளாளர்அருண்  தலைமையேற்றார். பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலை வகித்தார்கள். 

இடையிடையே ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்பித்தல் முறைகளில் உயிரோட்டமாக வகுப்பறையை வைத்துக் கொள்வதை பற்றிய கருத்துரையும் செயல் வடிவமும் ஆசிரியர்களுக்கும் கொடுக்கப்பட்டது. காலை 10.30 மணிக்கு துவக்கப்பட்ட அறிவியல் மன்ற விழா மாலை 3 மணி அளவில் முடிந்தது 

காத்தாடி வாழ்க்கை -  குறும்படம்

இந்நிகழ்ச்சியில் வேலூர் அறிவியல் இயக்க பொறுப்பாளர்   பூ சாமி  கலந்து கொண்டார். அறிவியல் செயல்பாடுகளை மாணவர்களுக்கு ஊக்கமூட்டும் அளவில் அமைந்ததை பாராட்டி பேசினார்.

மேலும் எதிர்கால வளர்ச்சியில் பல்வேறு துறை வாரியாக நிகழ்ச்சிகளை நடத்த  திட்டமிடப்பட்டது. ஆசிரியர்கள் நிறைய அறிவியல் செய்முறைகளை கற்றுக் கொண்டதாக ஃபீட்பேக் கூறினார்கள் 

மாணவர்கள் மிகவும் உற்சாகத்தோடு தொடர்ந்து கற்றுக் கொண்டார்கள் வண்ணங்களில் அவர்களாகவே புரிந்து கொள்கின்ற செய்முறையை அற்புதமாக பயிற்சி பெற்றதாக மாணவர்களும் ஃபீட்பேக் கூறினார்கள் 

இறுதியில் ஊக்கமூட்டுகின்ற அளவில் மாணவர்களுக்கு டாலர் அணிவித்து தொடர்ந்து சிறப்பு செய்யப்பட்டது 

இந்நிகழ்ச்சியை வேலூர் மாவட்டம் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட துணை தலைவரும் மாநில கருத்தாளரும் நல்லூர் வட்டம் விஸ்வநாதன் பயிற்சி கொடுத்தார் தொடர்ந்து பல்வேறு பள்ளிகளுக்குச் சென்று பல்வேறு தலைப்புகளில் குழந்தைகளை தயார்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

✍செய்தியாளர் சிந்து சீனு 


No comments

Thank you for your comments