குடியிருப்பு, கட்டிடக்கழிவுகளை திருட்டுத்தனமாக, அள்ளிக் கொண்டு செல்ல முற்பட்ட லாரி சிறைபிடிப்பு
விருத்தாச்சலத்தில் இடிக்கப்பட்ட குடியிருப்பு, கட்டிடக்கழிவுகளை திருட்டுத்தனமாக, அள்ளிக் கொண்டு செல்ல முற்பட்ட லாரியை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் இந்திரா நகர் பகுதியில் வசித்த குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்களை, நீதிமன்ற உத்தரவின் பேரில் வருவாய்துறை அதிகாரிகள் இடித்து வருகின்றனர்.
இடிக்கப்பட்ட கட்டிடங்களின் கழிவுகளான, செங்கற்கள் மற்றும் கான்கீரட் கற்கள், மலை போல் குவிந்து கிடக்கின்றன. இந்நிலையில் ராட்சத ஜேசிபி இயந்திரத்தின் மூலம், கொட்டிக் கிடக்கும் கழிவுகளை, லாரியில் திருட்டுத்தனமாக ஏற்றி செல்ல, முற்பட்டபோது, அப்பகுதி மக்கள் லாரியை சிறைபிடித்தனர்.
சுமார் அரை மணி நேரமாக, லாரி மற்றும் ஜேசிபி இயந்திரத்தை பொதுமக்கள் சிறை பிடித்து இருந்த நிலையில், அங்கு வந்து விருத்தாச்சலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் சிறைபிடிக்கப்பட்ட லாரியை அங்கிருந்து பத்திரமாக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுவது என்னவென்றால், எந்தவித டெண்டர் விடாமல், நகராட்சி கமிஷனர் சேகர் மற்றும் நகராட்சி கட்டிட பொறியாளர் சேகர் ஆகியோர் உத்தரவின் பேரில், கட்டிடக்கழிவுகளை இரவோடு இரவாக கடத்த முற்பட்டதாகவும், லாரி ஒன்றுக்கு 4000 முதல் 5000 ரூபாய் வரை வசூலிக்கப்படுவதாகும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
இந்நிலையில் நகராட்சி அதிகாரி ஒருவரிடம் பொதுமக்கள் கேள்வி கேட்கும் ஆடியோ சமூக வலைதளத்தில், வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த ஆடியோவில், நகராட்சி நிர்வாகம் தான் கட்டிடக்கழிவுகளை அள்ளுவதாகவும், அருணாச்சல நகருக்கு, கட்டிடக்கழிவுகளை கொண்டு செல்வதாக, நகராட்சி அதிகாரி ஒருவர் பேசுகிறார்.
இரவோடு இரவாக, கட்டிட கழிவுகளை அள்ள முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது


No comments
Thank you for your comments