Breaking News

வக்பு வாரிய சொத்துகள் மீது இருந்த தடை உத்தரவு, முத்தரப்பு பேச்சு வார்த்தையால், நீக்க பரிந்துரை செய்வதாக சார்ஆட்சியர் நம்பிக்கை

விருதாச்சலத்தில் வக்பு வாரிய சொத்துகள் மீது இருந்த தடை உத்தரவு, முத்தரப்பு பேச்சு வார்த்தையால், நீக்க பரிந்துரை செய்வதாக சார்ஆட்சியர் கூறினார்.



கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் சார் பதிவாளர் அலுவலகத்தில் கடந்த ஜனவரி மாதம்,  நூற்றுக்கு மேற்பட்ட சர்வே நம்பரில் உள்ள சொத்துக்களை, விற்கவோ, அடமானம் வைக்கவோ, தான செட்டில்மெண்ட் எழுதவோ முடியாது என்று அறிவிப்பை வெளியிட்டது.


மேலும் அறிவிப்பு செய்யப்பட்ட,  சொத்துக்கள் அனைத்தும் வக்பு வாரியத்திற்கு, சொந்தமான சொத்துக்கள் என்றும், யாரும் உரிமை கூற முடியாது என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாதிக்கப்பட்ட மக்கள் கடந்த மூன்று மாத காலமாக பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து நடத்தி வந்தனர். 

இதுகுறித்து விருத்தாச்சலம் சார் ஆட்சியர் பழனி தலைமையில், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் வகுப்பு வாரியத் துறை அதிகாரிகள், மாவட்ட சார்பதிவு அலுவலக அதிகாரிகள் என முத்தரப்பு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

இப்பேச்சுவார்த்தையில், விருத்தாச்சலம் சார் பதிவாளர் அலுவலகத்தின் மூலம் வெளியிடப்பட்ட அறிக்கையில் தடை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட அனைத்து சொத்துக்களுக்கும், தடை நீக்கப்பட்டதாகவும், இனிவரும் காலங்களில் சட்டப்படி கிரயம் பெற்ற சொத்துக்கள் அனைத்தும் விற்கலாம் என்றும் வாங்கலாம் என்று சார் ஆட்சியர் மேலிடத்திற்க்கு பரிந்துரை செய்வதாக கூறியதால், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்று வந்த பல்வேறு கட்ட போராட்டங்களால், ஏற்பட்ட முத்தரப்பு பேச்சு வார்த்தையில் சுமூக தீர்வு எட்டப்பட்டதால், பாதிக்கபட்ட பகுதி மக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சியடைந்தனர்.

No comments

Thank you for your comments