விருத்தாசலம் நகர திமுக மற்றும் இளைஞரணி செயற்குழு கூட்டம்
கடலூர் மேற்கு மாவட்டம் விருத்தாசலம் நகர திமுக மற்றும் நகர இளைஞர் அணி செயற்குழு கூட்டம் விருத்தாசலம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இக்கூட்டத்திற்கு நகர கழக செயலாளர் தண்டபாணி தலைமை தாங்கினார்.
இதில் மாவட்ட துணை செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் BVB முத்துக்குமார், நகர மன்ற உறுப்பினர் மருத்துவர் சங்கவி முருகதாஸ், முன்னாள் மாவட்ட துணை செயலாளர் அரங்க.பாலகிருஷ்ணன், நகர துணை செயலாளர் ராமு, நகர இளைஞரணி செயலாளர் பொன்.கணேஷ், கவுன்சிலர்கள் ஆட்டோ பாண்டியன், நம்பிராஜன், அன்பழகன், வயலூர் பழனிச்சாமி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள்இளைஞர் அணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களை தேர்வு செய்தமைக்காவும், மீண்டும் மாநில தி.மு.க மாநில இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை தேர்வு செய்த தி.மு.க தலைமை கழகத்திற்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானமும், தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்று சிறப்பாக செயல்படும் திராவிட முன்னேற்றக் கழக அரசின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றிட அனைவரும் ஒன்று சேர்ந்து ஒத்துழைப்பு நல்கிட வேண்டும், அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் சென்று சேருகிற வகையில் பிரச்சாரங்களை செய்ய வேண்டும், வருகிற 27 -ஆம் தேதி திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை மிக சிறப்பாக கொண்டாடிட வேண்டும், நாளை 26. 27 நடைபெற இருக்கிற சிறப்புவாக்குச்சாவடி முகாம்களில் வாக்குச்சாவடி முகவர்கள் கண்டிப்பாக கலந்து கொண்டு வாக்காளர்களை சேர்க்க வேண்டும், உள்ளிட்டதீர்மானங்கள் ஏகமானதாக நிறைவேற்றப்பட்டது.



No comments
Thank you for your comments