உத்திரமேரூர் பஸ் நிலையத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பிரம்மாண்டமான கேக் வெட்டி திமுகவினர் கொண்டாட்டம்
காஞ்சிபுரம், நவ.28-
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றிய மற்றும் நகரத்தின் சார்பில் உத்திரமேரூர் பஸ் நிலையத்தில் திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக பிரம்மாண்டமான 48 கிலோ எடை கொண்ட கேக் வெட்டி பொதுமக்களுக்கும் நிர்வாகிகளுக்கும் ஒன்றிய செயலாளர் ஞானசேகரன் வழங்கினார்.
பின் மதியம் பஸ் நிலையத்தில் உள்ள பயணிகளுக்கு 500க்கும் மேற்பட்டோருக்கு பிரியாணி வழங்கினார்
இந்நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் நாகன் பேருராட்சிசெயலாளர் பாரிவள்ளல் பேரூராட்சி மன்ற தலைவர் சசிகுமார் ஒன்றிய பெருந்தலைவர் ஹேமலதா ஞானசேகரன் துணை தலைவர் வசந்தி பேரூராட்சி துணைத் தலைவர் இளமது கோவிந்தராஜ் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் யுவராஜ் ஒன்றிய கவுன்சிலர் தயாளன் சுகுணா சுந்தர்ராஜன் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்


No comments
Thank you for your comments