Asia Book of Recordsல் சாதனை படைத்த மகளிர் மட்டுமே பங்கேற்ற மாபெரும் இருசக்கர வாகனப் பேரணி
கோவை மாநகர காவல்துறையானது, இந்துஸ்தான் கல்வி நிறுவனங்கள் மற்றும் SPARKLING STARZ ஆகியவற்றுடன் இணைந்து தலைக்கவசம், உரிய பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்து இருசக்கர வாகனங்கள் இயக்குவது மற்றும் போதைப் பொருளால் நேரிடும் தீமைகள் ஆகியவை குறித்த விழிப்புணர்வை பரப்புவது தொடர்பாக புதிய சாதனை ஒன்றைப் படைக்கும் நோக்கில் "மகளிர் மட்டுமே பங்கேற்ற மாபெரும் இருசக்கர வாகனப் பேரணி" ஒன்றை 19.11.2022ம் தேதி காலை 8 மணிக்கு கோவை மாநகரில் நடத்தியது.
இவ்வாகனப் பேரணியானது கோவை மாநகர் ஹிந்துஸ்தான் கல்லூரியில் காலை 08:30 மணிக்கு துவங்கி கொடீசியா மைதானத்தில் காலை 08:50 மணிக்கு நிறைவுற்றது. பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த கல்லூரி மாணவியர்கள், மகளிர் காவலர்கள் என மொத்தம் 1128 பெண்கள் கலந்து கொண்ட வரலாற்றுச் சாதனை படைத்தனர்.
ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ் பரபரப்பு பேட்டி
மகளிர் வாகனப் பேரணியினை கோவை மாநகர காவல் ஆணையர் வி.பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பாலாஜி நியூரோ சைக்கியாட்ரிக் மையத்தின் மருத்துவர் மோனி மற்றும் Asia Book of Recordsன் தீர்ப்பாளர் (Adjudicator) கவிதா ஜெயின் ஆகியோர் நேரடியாக பங்கேற்று கோவை மாநகர காவல் துறையின் பணியையும் முன்மாதிரியான இம்முயற்சியையும் வெகுவாக பாராட்டினர்.
Asia Book of Recordsன் தீர்ப்பாளர் (Adjudicator) கவிதா ஜெயின் மேற்படி வாகனப்பேரணி ஆசியச் சாதனை படைத்திட்ட விபரம் குறித்து அறிவிப்பு செய்து அதற்கான சான்றிதழையும், பதக்கத்தையும் Asia Book of Recordsன் சார்பாக கோவை மாநகர காவல் ஆணையர் அவர்களிடம் வழங்கினார்.
No comments
Thank you for your comments