387 ஆயுதப்படை காவலர்கள் திடீர் பணியிட மாற்றம்
கோவை
கோவை மாநகரில் 387 ஆயுதப்படை காவலர்கள் திடீர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மாநகர காவல் ஆணையரின் கட்டுப்பாட்டில் 15 காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சுமார் 1,500 காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆனால், கோவை மாநகரில் சுமார் 20 லட்சத்துக்கும் அதிகமாக மக்கள் தொகை உள்ள நிலையில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் காவலர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருப்பதாக கூறப்பட்டு வந்தது.
போதிய அளவில் காவலர்கள் இல்லாததால் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோரைக் கண்காணிப்பதில் சிக்கல்கள் நிலவுவதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்து வந்தனர்.
👆 10% இடஒதுக்கீட்டால் என்னென்ன ஆபத்து?..
அனைத்து கட்சி கூட்டத்தில் பட்டியலிட்ட
முதல்வர் மு.க.ஸ்டாலின்!
அதிலும் கோவையில் அண்மையில் நிகழ்ந்த பல்வேறு சம்பவங்களைத் தொடர்ந்து பாதுகாப்புப் பணிகளில் காவலர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் கோவை ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி வந்த 387 காவலர்கள் வெள்ளிக்கிழமை திடீர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் அங்கிருந்து உடனடியாக விடுவிக்கப்பட்டு மாநகரின் பல்வேறு காவல் நிலையங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ் பரபரப்பு பேட்டி
பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள காவலர்கள் அனைவரும் ஓரிரு நாள்களுக்குள் பணியில் இணைந்துவிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆயுதப்படை காலியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு சிறப்புக் காவல் படை கோவை, மதுரையில் இருந்து சுமார் 400 காவலர்கள் கோவை ஆயுதப்படைக்கு மாற்றப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஊழல்.. லஞ்சம்... அம்பலபடுத்தி கோஷம்...
No comments
Thank you for your comments