Breaking News

69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா... 953 பயனாளிகளுக்கு கடன் உதவி

காஞ்சிபுரம் மாவட்டம், அறிஞர் அண்ணா அரங்கத்தில் 69-வது அனைத்திந்திய கூட்டுறவு  வார விழா மாண்புமிகு  குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்  துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் 953 பயனாளிகளுக்கு ரூ 4.65. கோடி மதிப்பில் கூட்டுறவு சங்கங்களின் மூலம் கடனுதவி தொகை வழங்கப்பட்டது.



காஞ்சிபுரம் மாவட்டம், அறிஞர் அண்ணா அரங்கத்தில் 69-வது அனைத்திந்திய கூட்டுறவு  வார விழா மாண்புமிகு  குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்  துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் தலைமை வகித்து, மாவட்ட அளவிலான சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு பாராட்டுக் கேடயங்கள் மற்றும்  போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்குப் பரிசுகள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சி முன்னதாக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியம் பரந்துர் மற்றும் உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியம் சாலைவாக்கத்தில் துணை வேளாண் விரிவாக்க மைய கட்டிடங்கள் ரூ.76 இலட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களின் கல்வெட்டுகளை  மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்  துறை அமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.


 69-வது அனைத்திந்திய கூட்டுறவு  வார விழாவில் மாண்புமிகு  குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்  துறை அமைச்சர் அவர்கள் கூறியதாவது: கூட்டுறவு இயக்கத்தையும், கூட்டுறவு அமைப்புகளையும் மேம்படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்குடன் ஆண்டுதோறும் நவம்பர் 14 முதல் 20 வரை இந்தியா முழுவதும் கூட்டுறவு வார வா கொண்டாடப்படுகிறது. கூட்டுறவு இயக்கம் வணிக நோக்குடன் செயல்படாமல் ஏழ்மை வறுமை ஒழிப்பு  முக்கிய  பங்காற்றி வருகிறது.  கூட்டுறவு இயக்கம் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கின்ற அமைப்பாகும்.


1904-ஆம் ஆண்டில் காஞ்சிபுரம், திருவள்ளூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் திரூர் எனும் கிராமத்தில் விவசாய சேவை கூட்டுறவு சங்கம் என்ற பெயரில் முதன்முதலாக துவக்கப்பட்டது. ஆகவே இந்தியாவிலேயே கூட்டுறவு வங்கிகள் தொடங்கிய மாவட்டம் காஞ்சிபுரம் மாவட்டம் ஆகும். கூட்டுறவு துறை மிகச் சிறப்பாக பணியாற்றி ஏழை, எளிய மற்றும் சமுதாயத்தில் பின் தங்கிய மக்கள், விவசாய பெருமக்கள், சிறுவணிகர்கள், மகளிர் போன்ற அனைத்து தரப்பு மக்களும் பயன்பெரும் வகையில் தனது சிறப்பான சேவையினை வழங்கி வருகிறது.

கூட்டுறவு பற்றி பெரியார் அவர்கள்: மக்கள் சமுதாயம் கவலையற்று வாழ ஒழுங்கான முறை கூட்டுறவு தத்துவ வாழ்க்கை முறைதான் என்றும்,

இதயதெய்வம் அண்ணா அவர்கள்: மக்கள் ஒருமைபாட்டின் மறு உருவாக விளங்குவது கூட்டுறவு  என்றும், மக்கள் ஆட்சி மலர்ச்சி அடையும்போது கூட்டுறவு உணர்வு மலர்ச்சி  அடையும் என்றும்,

காலஞ்சென்ற மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்கள்: காகங்கள் போல் கூடி கரைந்து, கலைந்து சென்றுவிடாமல் வளங்கொழிக்க மேகங்கள் போல் கூடுவோம். மேன்மையுற கூட்றவை நாடுவோம். என்று கூட்டுறவு இயக்கத்தை சிறப்பாக எடுத்து கூறியுள்ளார்.

இந்த கூட்டுறவு வார விழாவினை சிறப்பாக கொண்டாடும் விதமாக கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் பல்வேறு நலத்திட்டங்கள் மூலம்   இவ்விழாவில்   953 பயனாளிகளுக்கு ரூ.4.65 கோடி மதிப்பில் கடன்கள் வழங்கப்படுகின்றது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 653 கூட்டுறவு நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இக்கடைகள் மூலம் 3,66,347 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற்று வருகிறார்கள்.  இக்குடும்ப அட்டைதாரர்களுக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் அறிவித்த விலையில்லா அரிசி திட்டத்தின் மூலம் மாதம் ஒன்றுக்கு 4600 மெட்ரிக்டன் அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் 145 கோடி 31 லட்சம் 28 ஆயிரம் நிதியை காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு வழங்கப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சென்ற நிதியாண்டில் கூட்டுறுவு துறையின் மூலம் நகைக்கடன் 62109 நபர்களுக்கு 430.கோடி 75 இலட்சமும், முதலீட்டு கடன் 93 நபர்களுக்கு 46 இலட்சம் 39 ஆயிரமும்,  பண்ணை சாரா கடன் 297 நபர்களுக்கு 5 கோடி 37 இலட்சமும், வீ கட்ட கடன் 1494 நபர்களுக்கு 10 கோடி 38 இலட்சமும், மகளிர் சுய உதவிகுழுக்கள் கடன் 20 கோடி 30 இலட்சமும் சிறு வணிக கடன் 1347 நபர்களுக்கு 3 கோடி 16 இலட்சமும், மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் 261 நபர்களுக்கு 95 இலட்சம் 83 ஆயிரமும் கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.


மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள விவசாய பெருமக்களுக்கு 9 மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள்  மற்றும் 53 தொடக்க கூட்டுறவு வேளாண்மை வங்கிகள் மூலம் இந்த நடப்பாண்டில் மட்டும் 5738 விவசாயிகளுக்கு ரூ.41.19/- பயிர் கடன்கள் வழங்கப்பட்டுள்ளது  என மாண்புமிகு  குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்  துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

அதன்பின், காஞ்சிபுரம் அருள்மிகு சித்தீஸ்வரர் திருக்கோயில் மண்டபத்தில் வள்ளலார் தனிபெருங்கருணை நாள் ஆண்டு முழுவதுக்குமான அன்னதான திட்டத்தினை மாண்புமிகு  குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்  துறை அமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி,இ.ஆ.ப., காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.க.செல்வம், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.க.சுந்தர், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சி.வி.எம்.பி.எழிலரசன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் திருமதி.மகாலட்சுமி யுவராஜ், வாலாஜாபாத் ஒன்றிய குழுத்தலைவர் திரு.தேவேந்திரன், மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் திருமதி.நித்தியா சுகுமார், மாநகராட்சி துணை மேயர் திரு.குமரகுருநாதன், காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு இணைப்பதிவாளர் திருமதி.பா.ஜெயஸ்ரீ, உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.                                                                  


வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments