Breaking News

கோவை கார் சிலிண்டர் வெடி வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேருக்கும் டிசம்பர் 6 ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு

கோவை கார் சிலிண்டர் வெடி விபத்தில் கைது செய்யப்பட்ட ஆறு பேரை கடந்த வாரம் பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.


22 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து ஆறு பேரையும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர் .

🔥 இராணி மேரி கல்லூரியை இடிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார் அம்மையார் ஜெயலலிதா   🔥 நான் இந்த நேரத்தில் அரசியல் எல்லாம் பேச விரும்பவில்லை, அது தேவையும் இல்லை  🔥 பட்டமளிப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

6 பேரையும் மீண்டும் விசாரணைக்கு ஆஜர் படுத்த வேண்டும் என்பதால் பாதுகாப்பு கருதியும் நீண்ட தூரம் அழைத்து வரவேண்டும் என்பதால்  கோவை மத்திய சிறையில் இருந்து 6 பேரையும் என்.ஐ.ஏ. நீதிபதி முன்பு வீடியோ கான்பிரன்ஸ் மூலம் விசாரணைக்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஆஜர்படுத்தினர் 

கானொளி காட்சி மூலம் விசாரித்த நீதிபதி, 6 பேரையும் டிசம்பர் 6ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.

No comments

Thank you for your comments