கஞ்சா வைத்திருந்த இருவர் கைது..! - 30கிலோ பறிமுதல்
திருவள்ளூர் :
திருவள்ளூர் மாவட்டம் போதை இல்லா தமிழகம் என்ற கோட்பாட்டை வலியுறுத்தி ஆவடி காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின்படி போதை ஒழிப்புக்காக ஆவடி ஆணைரகம் கட்டுப்பாட்டில் உள்ள காவல் நிலையங்களில் காவலர்கள் ஆங்காங்கே சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
பூவிருந்தவல்லி மதுவிலக்கு அமலாக்கு பிரிவு ஆய்வாளர் டில்லி பாபு அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் பெங்களூர் வெளிவட்ட சாலையில் சந்தேகத்தின்பேரில் நின்றுகொண்டிருந்த இரு நபர்களை காவல்துறையினர் விசாரித்தனர்.
விசாரணையில் முன்னுக்கு பின்னாக பதில் அளித்ததால் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்ததில் 30 கிலோ கஞ்சா போதை பொருள் சிக்கியது.
இதையடுத்து இரு நபர்களை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து தொடர்ந்து விசாரித்தனர்.
இந்த விசாரணையில் வசந்தகுமார்(22), வெள்ளத்துரை (24) என தெரியவந்தது. உடனே காவல் ஆய்வாளர் டில்லி பாபு நீதிமன்ற காவலுக்கு உட்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனால் டில்லி பாபு மற்றும் அவருடன் சென்ற தனி படையினரை ஆவடி காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் பாராட்டினார்.

No comments
Thank you for your comments