வடகிழக்கு பருவமழை எதிரொலி செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து கூடுதலாக 100 கன அடி நீர் திறப்பு
வடகிழக்கு பருவமழை எதிரொலி செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் 100 கன அடி நீர் திறந்து விடப்பட்டது.
சென்னை பெருநகர் பொது மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக செம்பரம்பாக்கம் ஏரி நீர் விளங்கி வருகிறது. வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதால் , செம்பரம்பாக்கம் ஏரி அமைந்துள்ள அதன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக கன மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து ஆனது 150 கன அடி நீரிலிருந்து, 24 மணி நேரத்தில் வேகமாக அதிகரித்து 800 கன அடி நீர் ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஏரிக்கு வரும் நீர் வரத்தானது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இன்னிலையில் செம்பரம்பாக்கம், கொள்ளளவை கருத்தில் கொண்டு தண்ணீரை திறந்து விட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதனை அடுத்து செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து முதல் கட்டமாக 100 கன அடி நீர் 3 மணி அளவில் வெளியேற்றப்பட்டது. ஏரியிலிருந்து தண்ணீர் வெளியேற்றப்படுவதற்கு முன், அபாய ஒளி எழுப்பப்பட்டு பொதுமக்களுக்கு வெள்ளை அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
ஏற்கனவே செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து சிப்காட் தேவை உள்ளிட்ட தேவையின் காரணமாக 150 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு, வந்த நிலையில் கூடுதலாக இப்பொழுது 100 கன அடி நீர் வெளியே திறந்து விடப்பட்டுள்ளது .
நீர் வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து, வெளியேற்றப்படும் நீரானது அதிகரிக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த வடகிழக்கு பருவ மழையின் பொழுது, முதல் முறையாக செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது குறிப்பிடத்தக்கது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறந்து விடப்பட்ட பொழுது காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி உடன் இருந்தார்.
இந்த வருடத்தில் செம்பரம்பாக்கம் ஏரி மூன்றாவது முறை திறக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



No comments
Thank you for your comments