Breaking News

இரவு நேர சினிமாவிற்கு சென்று வந்தவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி

திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் பகுதியில் குடும்பத்துடன் சினிமாவிற்கு சென்று இரவு இரண்டு மணிக்கு வீட்டிற்கு வந்தவுடன் காத்திருந்த பேரதிர்ச்சி..


அம்மா அவின்யூ ஐயப்பன் நகர் திருமுல்லைவாயலில் தனது பிள்ளைகளுடன் வசித்து வருகிறார் இவர் 15/10/2022 அன்று இரவு 9 மணிக்கு குடும்பத்துடன் சினிமா தியேட்டருக்கு சென்று படம் பார்த்துவிட்டு இரவு 2 மணிக்கு வீட்டுக்கு வந்துள்ளார்.



வீட்டின் முன் பக்க கேட் மற்றும் கதவு உடைக்கப்பட்டு இருந்தது உடனே வீட்டிலிருந்து  இருந்த பீரோவை பரத்ததும் பீரோவில் இருந்த பொருட்கள் திருடு போனதை தொடர்ந்து திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.



இந்த புகாரின் அடிப்படையில் திருமுல்லைவாயில் ஆய்வாளர் அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்...

No comments

Thank you for your comments