சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பை வழங்கும் விழா
திருவள்ளூர் :
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி வட்டத்திற்கு உட்பட்ட சோராஞ்சேரி கிராமத்தில் சிலம்பம் பயிற்சி வகுப்பு கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இவர்கள் தேசிய அளவில் சிலம்பம் போட்டியில் கலந்து கொண்டு 25 மாணவர்களுக்கு மேல் கோப்பையை வென்றுள்ளனர்.
இவர்களை பாராட்டும் வகையாக சோராஞ்சேரி கிராமத்தில் சிறப்பான நிகழ்ச்சி ஏற்பாடு செய்து, இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
மேலும் சக மாணவர்களுக்கு அடுத்த முறை வெற்றி பெற ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியினை ராஜன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பட்டாபிராம் உதவி ஆணையாளர் சதாசிவம் காவல் ஆய்வாளர் லாரன்ஸ் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
இந்த விழாவிற்கு ஊர் பொதுமக்களும் சோராஞ்சேரி ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சோராஞ்சேரி கிராமத்தில் முதன்முதலாக வழக்கறிஞராக சென்னை மற்றும் புதுச்சேரியில் பதிவு பெற்று வந்த தமிழச்சி ரீதா ராசன் அவர்களுக்கும் சோராஞ்சேரி கிராம மக்கள் பொன்னாடை போற்றி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

No comments
Thank you for your comments