சங்கர மடத்திற்கு வருகை புரிந்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி - சிறப்பு மரியாதை
காஞ்சிபுரம் சங்கர மடத்திற்கு வருகை புரிந்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பு நீதியரசர் டி.ராஜா அவர்களுக்கு சிறப்பு மரியாதை செய்தனர்.
காஞ்சிபுரம் கங்கைகொண்ட மண்டபம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சங்கர மடத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பு நீதி அரசர் டி ராஜா அவர்களுக்கு சங்கரமடம் சார்பில் சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
இதில் மகா பெரியவர் பிருந்தாவனத்திற்கு சிறப்பு தூபதீப ஆராதனைகள் நடைபெற்று மலர்மாலைகள் பொன்னாடைகள் அணிவித்து சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
இதில் செங்கல்பட்டு மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி மேபிஸ்தீபிகா சுந்திரவதனம். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆர்த்தி காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் சுதாகர் மற்றும் காஞ்சிபுரம் நீதிமன்ற சார்பு நீதிபதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயம் உள்ளிட்ட ஆலயங்களிலும் தரிசனம் செய்தார். அனைத்து ஆலயங்களிலும் இவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு சிறப்பு மரியாதையும் செய்யப்பட்டது.
.jpg)


.jpg)
No comments
Thank you for your comments