Breaking News

காவல்துறை சார்பில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு

பணியின் போது உயிர்த்தியாகம் செய்த காவலர்கள் நினைவை போற்றும் வகையில் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.



மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுதாகர் தலைமையில் காவலர் நினைவு தூணுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.


பணியின் போது நாட்டுக்காக உயிர் தியாகம் செய்து வீர மரணம் அடைந்த காவலர்களின் நினைவை போற்றும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 21ஆம் தேதி காவலர் வீர வணக்க நாளாக நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது.

அக்டோபர் மாதம் 21 ஆம் நாளான இன்று பணியின் போது உயிர் நீத்த காவலர்களுக்கு மரியாதை செய்யும் காவலர் வீரவணக்க நாள் காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறையின் சார்பில் அனுசரிக்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில்  மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காவலர் நினைவு தூணுக்கு காஞ்சிபுரம்  மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் எம் சுதாகர் தலைமையில் காவல்துறையினரின் வீர வணக்க மரியாதையுடன் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.


இந்நிகழ்ச்சியில் பணியின் போது உயிர் நீத்த காவலர்களின் உயிர் தியாகம் நினைவு கூறப்பட்டதை தொடர்ந்து, கூடுதல் காவல் கண்காணிப்பாளர், துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், காவல்துறை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள், மற்றும் பணி ஓய்வு பெற்ற காவல் துறையினர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு காவலர் நினைவுத்தூணுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செய்து அஞ்சலி செலுத்தினார்கள்.

No comments

Thank you for your comments