Breaking News

அரசு அலுவலகம் முன்பு தேங்கி கிடக்கும் குப்பை.... தொற்று பரவும் அபாயம்... பொதுமக்கள் அச்சம்

 பாப்பிரெட்டிப்பட்டி

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி  பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இந்த பகுதியில் சேகாரமாகும் குப்பைகள் ஆங்காங்கே கொட்டப்படுகிறது. பல நாட்கள் அள்ள படாமல் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. 

இதேபோல் பாப்பிரெட்டிப்பட்டி பத்திரப்பதிவு துறை அலுவலகம் முன்பு பல நாட்களாக தேங்கி கிடக்கும் குப்பையால். அலுவலகத்திற்கு எதிரே பள்ளி விடுதி மாணவர்கள் உள்ளனர் ,பாப்பிரெட்டிப்பட்டி வெங்கடசமுத்திரம், பொம்மிடி, பள்ளிப்பட்டி , கோம்பூர், உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள், வருகின்றனர் தொற்றுநோய் மற்றும் நோய் பரவும் அபாய நிலை உள்ளது.

இதனை பேரூராட்சி நிர்வாகம் முறையாக குப்பைகளை அப்புறப்படுத்தி தூய்மைப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றன

No comments

Thank you for your comments