அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தை மீட்டு தர கோரி ஆதிதிராவிட மக்கள் ஆட்சியரிடம் மனு
எலப்பாக்கம் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தை மீட்டு தர கோரி கிராமத்தை சேர்ந்த ஆதிதிராவிட மக்கள் காஞ்சிபுரம் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் மா.ஆர்த்தி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுக்கா எலப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில் காஞ்சிபுரம் மாவட்டம்,உத்திரமேரூர் தாலுகா,எலப்பாக்கம் கிராமத்தில் தாங்கள் குடும்பத்துடன் 50 வருடமாக வசித்து வருவதாகவும் தாங்கள் ஆதி திராவிடர் வகுப்பை சார்ந்தவர்கள் எனவும் வீட்டுமனை பட்டா இல்லாமல் வசித்து வருவதாகவும் மேலும் தங்கள் கிராமத்தில் புன்செய் நிலம் சர்வே எண் 84ல் 3 ஏக்கர் 85 சென்ட் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் தாங்கள் வீடு கட்டி குடியயேர சென்றால் அந்த நிலத்தை சென்னை சேர்ந்த மோகனலட்சுமி, சஜித்தா ஆகிய இருவரும் சேர்ந்து தனியாருக்கு சொந்தமான செராமிக்ஸ் கம்பெனிக்கு கிரையம் செய்துள்ளது தெரிய வந்துள்ளதாகவும் எனவே அந்த பத்திரத்தை ரத்து செய்து ஆதி திராவிடர் மக்களாகிய தங்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்குமாறு விடுதலை சிறுத்தை கட்சி காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் பாசறை செல்வராஜ் தலைமையில் 50க்கும் மேற்பட்ட கிராம ஆதிதிராவிட மக்கள் மாவட்ட ஆட்சியர் டாக்டர் மா.ஆர்த்தியிடம் மனு அளித்தனர்.


No comments
Thank you for your comments