Breaking News

மின்சார அலுவலகத்தில் இன்று தீ விபத்து

சென்னை: 

சென்னை அண்ணாசாலை மின்சார அலுவலகத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 10 கம்யூட்டர்கள் மற்றும் பொருட்கள் எரிந்து நாசமானது. 


சென்னை அண்ணாசாலை தர்கா அருகில் 31 கி.வோ.துணை மின் நிலையம், உதவி மின் செயற்பொறியாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இன்று அதிகாலை 5 மணிக்கு திடீர் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. 

தீ மளமளவென பரவி அங்கு உள்ள அலுவலகம் முழுவதும் கொழுந்து விட்டு எரிந்தது.உடனடியாக மின் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

இது குறித்து திருவல்லிக்கேணி, எழும்பூர் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக தீயணைப்பு வீரர்கள் 2 வண்டிகளில் விரைந்து வந்து தீயை அணைத்தனர். 

இதில் 10 கம்யூட்டர்கள், மின்சாதன பொருட்கள் எரிந்து சேதமானது. உதவி செயற்பொறியாளர், உதவி என்ஜினீயர் அலுவலகம் அனைத்தும் எரிந்து நாசமானது. இதில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து சேதமானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

2 மணி நேரம் போராடி தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் இன்று காலையில் திருவல்லிக்கேணி, புதுப்பேட்டை, அண்ணாசாலை பகுதிகளில் மின்சாரம் தடைபட்டது. இதனால் பொது மக்கள் கடும் அவதிப்பட்டனர்.


 

No comments

Thank you for your comments