Breaking News

ஹேண்ட்பால் போட்டியில் விவேகானந்த பள்ளி மாணவிகள் மாவட்ட அளவில் வெற்றி

காஞ்சிபுரம்  மாவட்ட விளையாட்டு அரங்கில்   நடைபெற்ற விளையாட்டு போட்டியில் ஹேண்ட்பால் போட்டியில் விவேகானந்த பள்ளி மாணவிகள் மாவட்ட அளவில் வெற்றி பெற்றனர்.




காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் பள்ளி கல்வித்துறை காஞ்சிரம் வருவாய் மாவட்ட அளவிலான பாரதியார் தின மற்றும் சுதந்திர தின விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. 



இதில் பல்வேறு குறுவட்டங்களில் வெற்றி பெற்ற மாணவிகள் சுமார் 750க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதில் ஹாக்கி, புட்பால், ஹேண்ட்பால் கைப்பந்து, வாலிபால் டென்னிஸ், பேட்மிட்டன், ஷெட்டில் கார்க் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.

இதில் வெற்றி பெறும் மாணவிகள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கு பெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் காஞ்சிபுரம் விவேகானந்தா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள் மாவட்ட அளவில் வெற்றி பெற்று மாநில அளவில் நடைபெறும் போட்டியில் பங்கு பெறதேர்ச்சி பெற்றுள்ளனர்.


இவர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் மற்றும் பள்ளியின் முதல்வர், செயலாளர் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

No comments

Thank you for your comments