அதிமுகவின் 51 வது தொடக்க விழாவை முன்னிட்டு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
சேலம்:
சேலம் புறநகர் மாவட்ட கழக செயலாளர் தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கியின் தலைவருமான இளங்கோவன், சேலம் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவரும் அயோத்தியாபட்டினம் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளருமான மெடிக்கல் ராஜா என்கின்ற ராஜசேகரன், அயோத்தியபட்டினம் தெற்கு ஒன்றிய கழகத்தின் அவை தலைவரும் மாவட்ட கவுன்சிலருமான கே எம் ரவி, சேலம் புறநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளரும் உடையாபட்டி தொடக்க வேளாண்மையின் கூட்டுறவு வங்கியின் தலைவருமான எம்.டி.வி.அருண்குமார், தகவல் தொழில்நுட்ப பிரிவின் ஒன்றிய செயலாளருமான ஹரி, சேலம் மாவட்ட அயோத்தியபட்டினம் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட வெள்ளாளகுண்டம் ஊராட்சியில் உள்ள புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மாவின் சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் கிளைக் கழகச் செயலாளர்கள் ஊராட்சி நிர்வாகிகள் ஒன்றிய செயலாளர்கள் ஊராட்சி செயலாளர்கள் மாவட்ட கவுன்சிலர்கள் கூட்டுறவு வங்கியின் தலைவர்கள் மற்றும் பலர் இதில் கலந்து கொண்டனர்.

No comments
Thank you for your comments