Breaking News

யமஹா தொழிலாளர்களுக்கு ஆதரவாக பல சங்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

யமஹா தொழிலாளர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், மாதர் சங்கம், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் உள்ளட்ட சங்கங்கள் சார்பாக காஞ்சிபுரம் தேரடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 


பத்து நாட்களாக தொடர்ந்து காத்திருந்து போராடும் யமஹா தொழிலாளர்களின் கோரிக்கையை உடனே தமிழக அரசு தலையிட்டு பேசி சுமூகமான தீர்வுகாண கோரி, யமஹா தொழிலாளர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், மாதர் சங்கம், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் உள்ளட்ட சங்கங்கள் சார்பாக காஞ்சிபுரம் தேரடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 


இதில் தவிச மாவட்ட தலைவர் சாரங்கன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கே.நேரு, வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் ஆர்.சுகுந்தன், வி.கே.பெருமாள், கைத்தறி சங்க மாவட்ட தலைவர் ஜி.எஸ்.வெங்கடேசன், புவணேஷ்வரி (சிஐடியு) அகியோர் கண்டித்து பேசினர்.








No comments

Thank you for your comments