குன்றத்தூர் ஒன்றியம் படப்பையில் சமுதாய வளைகாப்பு விழா.. எம்எல்ஏ செல்வபெருந்தகை சீர்வழங்கி வாழ்த்தினார்
ஸ்ரீபெரும்புதூர்
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட துறை சார்பில் படப்பையில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் சட்டமன்ற உறுப்பினர் செல்வப் பெருந்தகை கர்ப்பிணிகளை வாழ்த்தி சீர்வரிசை பொருட்களை வழங்கினார்
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் படப்பை பகுதியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட துறை சார்பில் வளைகாப்பு விழா நடைபெற்றது
இவ்விழாவிற்கு மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கிருஷ்ணவேணி தலைமை வகித்தார்
சிறப்பு அழைப்பாளர்களாக ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை மனோகரன் கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு புடவை,பூ, பழம்,தேங்காய் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை வழங்கி வாழ்த்தினர்
இதில் ஒன்றிய குழு தலைவர் சரஸ்வதி மனோகரன் ஒன்றிய குழு துணை தலைவர் உமா மகேஸ்வரி வந்தேமாதரம் குன்றத்தூர் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கோமளம் மணிமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் இரா.ஐயப்பன் ஒரத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் வள்ளி சுந்தர் படப்பை ஊராட்சி மன்ற தலைவர் கர்ணன் எழுச்சூர் ஊராட்சி மன்ற தலைவர் ஸ்ரீவித்யா ரஞ்சித் திமுக ஒன்றிய இளைஞரணி செயலாளர் அறிவொளி மற்றும் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள் உள்ளாட்சி பிரிதிநிதிகள் கலந்து கொண்டனர்


No comments
Thank you for your comments