Breaking News

காஞ்சிபுரத்தில் சத்துணவு (ம) அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் காலித்தட்டு ஏந்தி ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம் :

தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் காவலான்கேட் பகுதியில் காலித்தட்டேந்தி ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் காவலான்கேட் பகுதியில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் நலச்சங்கம் சார்பில் காலித்தட்டேந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் ஒன்றியத்தின் தலைவர் என்.குமார் தலைமை வகித்தார்.ஒன்றிய செயலாளர் பி.சங்கர்,சங்க நிர்வாகிகள் கே.மதியழகன்,எஸ்.ஆரோக்கிய மேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஒவ்வொரு வீட்டிலும் "குட்டி காவலர் "

கோரிக்கைகளை விளக்கி சங்க மாவட்ட தலைவர் ஜெ.தாமஸ் இளங்கோவன், மாவட்ட செயலாளர் வி.தணிகைமணி,மாவட்ட பொருளாளர் டி.கன்னியப்பன்,துணைத் தலைவர் வெ.குமார் ஆகியோர் உட்பட பலரும் பேசினார்கள்.

சங்க உறுப்பினர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை,காசில்லாமல் மருத்துவக் காப்பீடு வழங்குதல்,குடும்ப ஓய்வூதியம்,சட்டப் பூர்வ ஓய்வூதியமாக ரூ.7850 வழங்க வலியுறுத்துதல் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.காலித்தட்டேந்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் கோஷங்களையும் எழுப்பினார்கள்.


No comments

Thank you for your comments