Breaking News

பட்டு வளர்ச்சி துறை இயக்குனர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

பட்டு வளர்ச்சி துறையில் காலியாக இருக்கின்ற இளநிலை ஆய்வாளர் உள்ளிட்ட அனைத்து காலி பணியிடங்களையும் உடனடியாக நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  பட்டு வளர்ச்சி துறை இயக்குனர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


தமிழ்நாடு பட்டு வளர்ச்சி துறையில் காலியாக உள்ள இளநிலை ஆய்வாளர் உள்ளிட்ட அனைத்து காலிப்பணியிடங்களையும் உடனடியாக நிரப்பிட வேண்டும், ஊழியர் பற்றாக்குறையால் களப்பணியாளர்கள் கடுமையான பணி நெருக்கடி சூழலில் பணிபுரிந்து வரும் நிலையில் நிர்வாகத்தால் மேற்கொள்ளப்படும் ஊழியர் விரோத போக்கினை கைவிட வேண்டும், குற்ற குறிப்பானைகள் பழிவாங்கும் மாறுதல்கள் போன்ற நடவடிக்கைகள் மூலம் ஊழியர்களை மன உளைச்சல் மற்றும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கும் போக்கினை கைவிட வேண்டும்...



பட்டு பண்ணைகளின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தாமல் இலக்குகளை மட்டுமே இரட்டிப்பாகியதை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சங்கத்தின் மாநில தலைவர் வே. வெங்கடேஷ் தலைமையில் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடைபெற்றது .

போராட்டத்தை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணை பொது செயலாளர் மு. சீனிவாசன் துவக்கி வைத்தார். கோரிக்கைகளை விளக்கி சங்கத்தின் பொதுச் செயலாளர் நா. சுரேஷ் குமார் பேசினார். 


இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பி.சுரேஷ் ,பட்டு வளர்ச்சி முன்னாள் மாநில பொதுச் செயலாளர் பி.கோவிந்தசாமி, வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநிலத் துணைத் தலைவர் வே. அர்த்தனாரி, சி. முருகப்பெருமாள் உள்ளிட்டு பலர் பங்கேற்றனர். 

பட்டு வளர்ச்சி துறை சேலம் மாவட்ட செயலாளர் சந்தோஷ் குமார் உள்ளிட்டு 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர் போராட்டத்தை தொடர்ந்து பட்டு வளர்ச்சி இயக்குனரிடம் கோரிக்கைகளை மனுவாக வழங்கினர்.


No comments

Thank you for your comments