Breaking News

காஞ்சிபுரம் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை சரிந்தது

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் பூ மார்க்கெட்டில் நகரை சுற்றி உள்ள அனைத்து கிராமங்களில் இருந்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பூக்களை வாங்கி வருகின்றனர். இதனை தவிர்த்தால் வியாபாரிகள் கோயம்பேடு மார்க்கெட் அல்லது வேலூர் பூ மார்க்கெட்டுக்கு தான் செல்ல வேண்டும்.  இதனால் காஞ்சிபுரம் சந்தையில் அதிகமாக பூ வியாபாரம் நடைபெறுவது வழக்கம். 


பெரும்பாலும் ஓசூர் பகுதியில் இருந்து ரோஜா பூக்கள் விற்பனைக்கு வருகிறது. இதேபோல் மல்லி, முல்லை ஆகிய பூக்கள் காஞ்சிபுரம் அருகே புரிசை, சந்தவேலுர், பிச்சிவாக்கம் உள்ளிட்ட பல கிராமங்களில் இருந்து வர வைக்கப்ப டுகிறது. 

சாமந்திப்பூ மட்டும் ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் இருந்து வருகின்றன. கடந்த வாரம் ஆயுத பூஜை தினத்தன்று 1500 வரை விற்பனை செய்யப்பட்ட மல்லிகைப்பூ விலை தற்போது சரிந்து ரூ.200-க்கு விற்கப்படுகிறது. 

இதேபோல் ரூ.250-க்கு விற்ற சம்பங்கி பூ இன்று ரூ.20-க்கும், ரூ.400-க்கு விற்பனை செய்த சாமந்தி பூ விலை இன்று ரூ.50-க்கும் விற்கப்படுகிறது. திருமணம் மற்றும் முக்கிய விசேஷ நிகழ்ச்சிகள் இல்லாததால் தற்போது பூக்களின் விலை சரிந்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


No comments

Thank you for your comments