மழைநீர் கால்வாயில் ஆவடி மாநகராட்சி முறைகேடு
திருவள்ளூர், அக்.12-
திருவள்ளூர் மாவட்டத்தில் கலெக்ஷன் கரெப்க்ஷனில் முதலிடம் பிடித்தது ஆவடி மாநகராட்சி என்று பொதுமக்கள் தரப்பில் கடும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
இந்நிலையில், ஆவடி மாநகராட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை அவ்வப்போது வந்து போவது நம் அனைவரும் அறிந்ததே... தற்பொழுது ஆவடி மாநகராட்சியின் பின்புறம் ஹவுசிங் போர்டு பகுதியிலும் மற்றும் நெடுஞ்சாலையில் மழை நீர் கால்வாய் கட்டும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்த பணி உடனடியாக முடிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் உத்தரவிட்டுருந்தார்.
கடந்த ஆண்டு மே மாதம் ஆவடி சுற்றுவட்டார பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட தமிழக முதல்வர் லஞ்ச ஒழிப்பு துறைக்கு, மழை நீர் கால்வாயில் சரியாக கட்டவில்லை இதில் முறைகேடு நடந்துள்ளதாகவும் இதனை உடனடியாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்
இதனை லஞ்ச ஒழிப்பு துறையினர் மழை நீர் கால்வாயை வீடியோ எடுத்தது இந்த கால்வாய் சரிவர பணி நடைபெறவில்லை... இதில் சுமார் 40 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்திருப்பதாகவும் முதல்வருக்கு லஞ்ச ஒழிப்புத்துறை கடிதம் எழுதி இருந்தனர்
இதை தொடர்ந்து தற்போது கட்டியுள்ள மழை நீர் கால்வாயில் முறைகேடு நடந்துள்ளதாக ஹவுசிங் போர்டு பொதுமக்களும், சமூக அலுவலகம் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் தொடர்ந்து இந்த பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஆனால் இந்த கால்வாயில் ஆக்கிரமிப்பு இருந்தாலும் கூட சற்றும் யோசிக்காமல் மழை நீர் கால்வாய் கட்டும் பணியை ஒப்பந்ததாரர்கள் நடத்திக் கொண்டுள்ளனர். இந்த பணியினை ஆய்வு செய்யவேண்டிய ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் கண்காணிக்கவில்லை.... பணி எவ்வாறு நடைபெறுகிறது என்றும் யாரும் பார்வையிடவில்லை... ஆய்வும் செய்யவில்லை... இவர்களுக்கு “ப” வைட்டமின் கிடைத்துவிட்டது என்று அலுவலகத்தில் ஓய்வு எடுக்கின்றனர். இதை ஒப்பந்ததாரர்கள் சாதகமாக பயன்படுத்திக்கொண்டு கணக்கு காட்டுவதற்காக என்ற அடிப்படையில் பணி நடைபெறுகிறது..
இந்த மழை நீர் கால்வாயில் 50க்கும் மேற்பட்ட மின்கம்பங்களும் போர்வெல் போன்றவை உள்ளன. மழை நீர் கால்வாய் நடுவிலே இருக்கிறது இதை கவனித்தும் கவனிக்காதது போல் மழைநீர் கால்வாய் கட்டும் பணி வேகமாக நடந்து வருகிறது. இதனால் மழை நீர் செல்வதற்கு பெரும் தடையாகவே இருக்கும். இந்த பணியால் பயன் ஏதும் இல்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் அநியாயமாக மக்கள் வரிப்பணம் வீணாகிறது என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இதனை ஆய்வு செய்து உடனடியாக மின்கம்பங்களையும் போர்வெல் மற்றும் தனியார் ஆகிரமைப்புகளையும், கடைகளையும் கண்டறிந்து அகற்ற வேண்டும் என்றும், ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இனியாவது ஆவடி மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை எடுக்க முன்வருவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
No comments
Thank you for your comments