Breaking News

அம்மன் குளம் சுத்தம் செய்யும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் தனியார் செவிலியர் மருத்துவக் கல்லூரி மாணவர்கள்

தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் தாயார் அம்மன் குளம் சுத்தம் செய்யும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் தனியார் செவிலியர் மருத்துவக் கல்லூரி மாணவர்கள்.



காஞ்சிபுரம் மாநகராட்சியில் வா மாதத்தில் இரண்டு முறை தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் கல்லூரி மாணவர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் இணைந்து பல்வேறு இடங்களில் தூய்மை செய்து வருகின்றனர்.


அந்த வகையில் இன்று காஞ்சிபுரம் தாயாரம்மன் குளம் பகுதியில் தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் காஞ்சிபுரம் மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் தனியார் செவிலியர் மருத்துவர் கல்லூரி மாணவர் இணைந்து சுத்தம் செய்யும் பணியை இன்று காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் கண்ணன் மற்றும் நான்காவது மண்டல குழு தலைவர் செவிலிமேடு மோகன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

முன்னதாக தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் உறுதி மொழியும் ஏற்றனர்.


இந்நிகழ்வில் 38-வாது வார்டு மாமன்ற உறுப்பினர் சரளா சம்பத் மாநகராட்சி ஆய்வாளர்கள் ரமேஷ், குமார், இக்பால்  தனியார் செவிலியர் மருத்துவ கல்லூரி மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர்  உடன் இருந்தனர்.



No comments

Thank you for your comments