Breaking News

திமுக என்ற பெயர் எழுதிய உருவ பொம்மையை பாஜகவினர் எரிக்க முற்பட்டதால் பரபரப்பு

விருத்தாச்சலத்தில் திமுக என்ற பெயர் எழுதிய உருவ பொம்மையை பாஜகவினர் எரிக்க முற்பட்டதால் பரபரப்பு.


 

கடலூரில் நேற்று பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக அரசு பற்றியும்,  திமுக அமைச்சர்களின் செயல்பாடுகள் பற்றியும், மாநில தலைவர் அண்ணாமலை  பேசி இருந்தார். 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று திமுக -வினர் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் உருவ பொம்மையை எரித்து, தங்களது எதிர்ப்பை தெரிவித்திருந்தனர்.

இதனைக் கண்டித்து,  விருத்தாச்சலம் பாலக்கரையில்,  பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள், திமுக என்ற பெயர் எழுதிய உருவ பொம்மையை எரிக்க முற்பட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் உருவ பொம்மையை எரிக்க விடாமல், பிடிங்கி சென்றனர். 

பின்னர் திமுக அரசின் அராஜக போக்கை கண்டித்தும், திமுக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை கண்டித்தும் விருத்தாசலம் நகர தலைவர் மணியழகன் தலைமையில் கண்டன முழுக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதில் வேட்டை கொடி எழிலரசன் விருத்தாசலம் ஒன்றிய தலைவர் தங்க வெங்கடேசன், மங்கலம்பேட்டை ராஜேந்திரன் வடக்கு ஒன்றிய தலைவர் பரமசிவம் வடக்கு ஒன்றிய பொருளாளர் பாலு உள்ளிட்ட பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு

திமுகவுக்கு எதிர்ப்பு தெரிவித்து உருவ பொம்மையை பாஜகவினர் எரிக்க முயன்றதால் விருத்தாச்சலத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

No comments

Thank you for your comments