போக்சோ வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்த திருவள்ளூர் மகிலா நீதிமன்றம்
போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட இருவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 31 ஆயிரம் அபராதம் விதித்து திருவள்ளூர் மகிலா நீதிமன்றம் தீர்ப்பு வழகியது.
திருவள்ளூர் மாவட்டம் கடந்த 27 06 2019 அன்று டி 10 திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் நான்கு வயது உடைய சிறுமியின் தாயார் ஒருவர் தனது மகளை பக்கத்து வீட்டில் வசிக்கும் மீனாட்சி சுந்தரம் 63 தா/பெ வில்லி ஆழ்வார் எண் 157/158 3 வது கிராஸ் பெயிண்ட் அந்தோணி நகர் கார்செட் வளாகம் அன்னனூர் என்பவர் தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாகவும் இக்குற்றத்தை மறைத்த அவரது மனைவி ராஜம்மாள் 57 கா/பெ மீனாட்சி சுந்தரம் என்பவர்கள் மீது டி10 திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இவ்வழக்கின் விசாரணை முடிந்து திருவள்ளூர் மகிலா நீதிமன்றத்தில் இருவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் திருவள்ளூர் மகிலா நீதிமன்றம் வழக்கு விசாரணை இன்று முடிவுக்கு வந்தது இருவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் இருவருக்கும் 31,000 அபராதம் விதித்தும் இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்தும் திருவள்ளூர் மகிலா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
பிறகு காவல்துறையினர் இதுவரையும் புழல் சிறையில் அடைத்தனர் மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூபாய் 5 லட்சம் தொகையை பெற்றோருக்கு வழங்கவும் நீதிமன்றத்தில் ஆணை பிறப்பிக்கப்பட்டது.
இது தொடர்பாக ஆவடி காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் அவர்கள் இவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுத்த திருமுல்லைவாயில் முன்னால் ஆய்வாளர் சந்திரசேகர் மற்றும் பிரம்மின் டேணிசபீன் மற்றும் தற்போதைய ஆய்வாளர் விஜயராகவன் அவர்களை பாராட்டினார்



No comments
Thank you for your comments