எல்என்டி ஊழியரை அறிவாளால் வெட்டிய மர்ம நபர்கள் கைது... செல்போன் மற்றும் ரூபாய் பறிப்பு
மனுதாரர் கப்பா புருஷோத்தம் (45) மற்றும் இரண்டு நபர்கள் நீர்வல்லூர் எல்என்டி கம்பெனியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு சுமார் 10:30 மணி அளவில் நீர் வல்லவர் கூட்டுச்சாலை அருகே வந்த மனுதாரரிடம் அடையாளம் தெரியாத 20 வயதுடைய இரண்டு நபர்கள் அறிவாளால் வெட்டி செல்போன் மற்றும் ரூபாய் 2000 வழிப்பறி கொள்ளை செய்த வழக்கில் காஞ்சி தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் திரு பேசில்பிரேம் ஆனந்த், உதவி ஆய்வாளர் திரு துளசி , பயிற்சி உதவி ஆய்வாளர் திரு அருண், நிலைய தலைமை காவலர்கள் திரு வேஸ்லி, திரு விஜய் ஆகியோர் வேடல் பெட்ரோல் பங்க் அருகே வாகன சோதனை செய்த போது இரவு 11 மணிக்கு சந்தேகத்தின் பேரில் பிடித்து குணசேகரன் வயது 18 த/பெ. கலாநிதி, மேட்டு பரந்தூர் கிராமம், 2) லோகேஷ் வயது 18 முருகேசன் போந்தவாக்கம் கிராமம், ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் மாவட்டம் ஆகிய இரண்டு நபர்களை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்ததில் அவர் பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தில் செல்போன் - 12 மற்றும் சம்பவத்திற்கு பயன்படுத்திய அரிவாள் -1, இருசக்கர வாகனம் - 1 ஆகியவை வாகனத்தில் இருந்து கைப்பற்றப்பட்டது. இதனை அடுத்து அவர் சம்பவத்தை ஒப்பு கொண்டதால் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வரப்பட்டது.
No comments
Thank you for your comments