விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் அறிவிப்பு
அக்டோபர் 2022 மாதம் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தின் அக்டோபர் 2022 மாதத்திற்கான விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் 28.10.2022 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10.30 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் வேளாண் அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம் வல்லுநர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பாக அறிவுரைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு விளக்கம் அளிக்க உள்ளனர். ஆகவே, விவசாய பெருமக்கள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
கூட்டம் நடைபெறும் அன்றைய தினம் சம்பா பருவம் நெல் II க்கு பயிர் காப்பீடு செய்வதற்கும், பிரதான் மந்திரி நுண்ணீர் பாசனத் திட்டத்தில் இணையவழி பதிவுகள் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டங்களில் பதிவு செய்ய விருப்பம் உள்ள விவசாயிகள்
1. ஆதார் அட்டை - நகல்,
2. சிட்டா, அடங்கல் - நகல்,
3. நிலவரை படம் - நகல்,
4. ரேஷன் கார்டு - நகல்,
5.பாஸ்போட் சைஸ் போட்டோ - 1,
6.இணையவழி சிறு / குறு விவசாய சான்று,
7. வங்கி கணக்கு புத்தகம் - நகல்,
8. நிலத்தின் பரப்பளவு - பட்டா நகல் ஆகிய ஆவணங்களுடன் கலந்து கொண்டு பதிவு செய்து பயன் அடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments
Thank you for your comments