மழைகாலங்களில் செய்யவேண்டியவை... செய்யக்கூடாதவை...
வட கிழக்கு பருவ மழை குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பாதுக்காப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துதல்
வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் மின் கம்பிகளுக்கு அருகிலுள்ள மரக்கிளைகள் வெட்டுவதற்கு மின் துறையை கண்டிப்பாக அணுக வேண்டும்.
மின் கம்பிகள் அறுந்து விழுந்து கிடந்தால் அதனருகே செல்லாமல் அருகிலுள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.
மின் மாற்றிகள், மின்கம்பங்கள், மின் பகிர்வு பெட்டிகள், ஸ்டே ஒயர்கள் ஆகியவற்றின் அருகே யாரும் செல்லக்கூடாது. ஈர கையால் மின்சார சாதனங்களை தொடக்கூடாது.
மின் பாதைகளுக்கு இடையே உயரமான சாதனங்களை கொண்டு செல்லக்கூடாது. மின் பாதைகளுக்கு அருகே கட்டிடம் கட்டகூடாது.
மின் கம்பிகளுக்கு அருகிலோ அல்லது கீழே பணிபுரியும் போது போதிய இடைவெளி உள்ளதா என்பதை அறிந்து விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.
மின் கம்பத்திலோ அவற்றைத் தாங்கும் கம்பிகளிலோ கால்நடைகளை கட்டக்கூடாது. குளியலறை, கழிப்பறைகள் ஈரமான இடங்களிலும் சுவிட்சுகளை பொருத்தாதீர்கள்.
ஐஎஸ்ஐ முத்திரை பெற்ற மின் சாதனங்களை மட்டுமே பயன்படுத்துங்கள். மின் கசிவு தடுப்பாணை பொதுமக்கள் இல்லங்களில் உள்ள மெயின் சுவிட்சு போர்ட்டில் பொருத்தி, மின் கசிவினால் ஏற்படும் மின் விபத்தை தவிர்க்க வேண்டும்.
மின் தடை புகார்களுக்கு மின்னகம் 9498794987 என்ற செல்போன் சேவையை தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவிக்கலாம் என கூடுதல் தலைமை பொறியாளர் பொறிஞர்.கி.சண்முகம் அவர்கள் தெரிவித்துள்ளார்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments
Thank you for your comments