Breaking News

கிராம சபையில் கிராம அடிப்படை வசதிகளைக் கேட்ட பொதுமக்கள்

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் உத்தரவின் பெயரில் காந்தி ஜெயந்தி தின விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஆங்காங்கே கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது அதேபோல் வில்லிவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட அயப்பாக்கம் முதல் நிலை ஊராட்சியில் கிராம சபை கூட்டம் மற்றும் ஊட்டச்சத்து மாதம் சமுதாய வளைகாப்பு விழாவும் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக மதுரவாயில் சட்டமன்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கணபதி அவர்கள் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் துரை வீரமணி தலைவர் செயல் அலுவலர் அயனம்பாக்கம் முதல் நிலை ஊராட்சி மற்றும் பிரெட்ரிக் அருண்குமார் வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன் வட்டார வளர்ச்சி அலுவலர் அரசு அதிகாரிகள் ஊர் பொதுமக்கள் 500 பேருக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் அயப்பாக்கம் ஊராட்சியில் உள்ள குறைகளைப் பற்றி பொதுமக்கள் தெரிவித்தனர். இந்த பகுதியில் கழிவுநீர் அதிகமாக சாலைகளில் இருப்பதாகவும் சாலைகளும் சரிவர இல்லை சாலைகளில் நாய் ஆடு, மாடுகள் இருப்பதால் வாகனங்களில் செல்ல முடியாமல் தொடர்ந்து இப்பகுதி மக்கள் அவதிப்பட்டு கொண்டிருக்கிறார்கள். இதனால் இதை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

அதற்கு துரை வீரமணி அவர்கள் இரண்டு மூன்று மாதத்திற்குள் இந்த பணிகள் விரைவாக முடிக்கப்படும் என்று உறுதி அளித்தார் அதேபோல் குப்பைகளை வீட்டுக்கு வீடு சென்று வாங்குவதற்கு 25 வாகனங்கள் வாங்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஒப்புதல் வழங்கி உள்ளார். இன்னும் இரண்டு நாட்களில் இந்தப் பணியும் நிறைவடையும் என்பதையும் தெரிவித்தார்.

நடமாடும் மருத்துவர்  மூலம் மருத்துவர்கள் வீடுகளுக்கு சென்று மருத்துவம் பார்க்கின்றனர். இதுபோல் நல்ல திட்டங்களை செய்து வருவதால் இவருக்கு இப்பகுதியில் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். இதே பகுதியில் வளைகாப்பு விழாவில் 50 நபர்களுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டு அவர்களுக்கு பரிசு பொருள்களும் வழங்கப்பட்டது இதனால் இப்பகுதியில் இவருக்கு நல்ல வரவேற்பு உள்ளதாக பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பாராட்டுகள் தெரிவித்தனர்

No comments

Thank you for your comments