Breaking News

சென்னை உயர்நீதிமன்றத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டவரின் குடும்பத்தினர், குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்க ஆட்சியரிடம் கோரிக்கை.

காஞ்சிபுரம் :

சென்னை உயர்நீதிமன்றத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டவரின் குடும்பத்தினர் வெள்ளிக்கிழமை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தியை சந்தித்து குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்க வேண்டும் என்பன உட்பட 6 கோரிக்கைகளை முன்வைத்தனர்.



காஞ்சிபுரம் மாவட்டம் திருமால்பூர் காலணி படப்பை பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன்(42)இவர் பழங்குடியினத்தவர் என்ற சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்திருந்த நிலையில் தன்னை அதிகாரிகள் அலைக்கழிப்பதாக கூறி கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.


இச்சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு அரசினை அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.இதற்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி சார்பில் அவர் மலைக்குறவர் என சான்றிதழ் தருமாறு விண்ணப்பித்திருந்தார். அவர் பட்டியலின வகுப்பை சேர்ந்தவர் என தெரிவித்து அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது என அறிக்கை தாக்கல் செய்திருந்தார்..

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி இரு வாரங்களுக்குள் தெரிவிக்குமாறும் கூறியிருந்தது.இந்த நிலையில் உயிரிழந்த வேல்முருகனின் மனைவி சித்ரா(37)இவரது மகன் பிரதீவி ரூபன்(15) மகள்கள் பிரதீபா(8)பிரியங்கா(6)மற்றும் இவர்களது உறவினர்கள்,பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தியை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினர்.



அப்போது அவர்கள் தங்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், ரூ.50லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும், சாதிச்சான்று வழங்க வேண்டும். குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும், சான்றிதழ் தராமல் அலைக்கழித்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற 6 கோரிக்கைகளை முன்வைத்தனர்.

ஆட்சியர் மா.ஆர்த்தி அவர்களிடம் வீட்டு மனைப்பட்டா இரு தினங்களுக்குள் வழங்கப்படும்,குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்பது,அரசுப்பணி வழங்குவது மற்றும் இழப்பீட்டுத் தொகை தருவது ஆகியனவற்றை அரசிடம் கேட்டு தெரிவிக்கப்படும். உயர்நீதிமன்றத்தில் சாதிச்சான்று தொடர்பாக என்ன உத்தரவு வருகிறது எனப்பார்த்து அதன்படி சான்றிதழ் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

ஒவ்வொரு வீட்டிலும் "குட்டி காவலர் "

வேல்முருகன் குடும்பத்தினருடன் வனவேங்கை அமைப்பின் மாநிலத்தலைவர் இரணியன்,இந்தியக் குடியரசுக் கட்சி மாநிலப் பொறுப்பாளர் அன்புவேந்தன்,விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் பாசறை செல்வராஜ்,பாஜக மாநில பொறுப்பாளர் ராமசாமி உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகளும் உடன் வந்திருந்தனர்.

படவிளக்கம்}காஞ்சிபுரம் ஆட்சியர் மா.ஆர்த்தியை சந்தித்து கோரிக்கை மனுவை அளிக்க வந்திருந்த உயிரிழந்த வேல்முருகனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள்

No comments

Thank you for your comments