Breaking News

காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் 222 காவலர்களுக்கு காவலர் பயிற்சி நிறைவு விழா

 காஞ்சிபுரம் 

கூடுதல் காவல் துறை இயக்குனர் அமல்ராஜ் ஐபிஎஸ், காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று, பயிற்சி முடித்து தேர்ச்சி பெற்ற காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார்.

தமிழக காவல்துறை பணிக்கு தேர்வு செய்யப்பட்ட 222 காவலர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறையின் மூலம் நடத்தப்படும் காவல்துறை பயிற்சி பள்ளியில் கடந்த ஏழு மாதங்களாக காவலர் பயிற்சி மட்டுமி நீச்சல் பயிற்சி, ஓட்டுனர் பயிற்சி, முதலுதவி பயிற்சி, தீயணைப்பு பயிற்சி, கமாண்டோ பயிற்சி மற்றும் இதர பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்ற காவலர்களின் பயிற்சி நிறைவு விழா இன்று நடைபெற்றது.

காவலர் பயிற்சி நிறைவு விழாவில் தாம்பரம் ஆணையரகம், கூடுதல் காவல் துறை இயக்குனர் டாக்டர் அமல்ராஜ் ஐபிஎஸ் கலந்து கொண்டு காவலர்களின் அணிவகுப்பு மரியாதை ஏற்று, பல்வேறு பயிற்சிகளில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்த காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கி கௌரவித்தார்.

காவலர் பயிற்சி நிறைவு  அணிவகுப்பு விழாவில் காவலர்களின் அணிவகுப்பு மரியாதையும், சிலம்பாட்டம், கராத்தே பயிற்சி, உடற்பயிற்சி உள்ளிட்டவை பயிற்சி பெற்ற காவலர்களால் செய்து காண்பிக்கப்பட்டது.

விழாவில் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் எம் சுதாகர் காவலர் பயிற்சி பள்ளி துணை முதல்வர் டிஎஸ்பி சண்முகம் மற்றும் மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகளும், பயிற்சி பெற்ற காவல் துறையினரின் பெற்றோர்களும் உறவினர்களும் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments