மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.13,98,700/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்
காஞ்சிபுரம் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பயனாளிகளுக்கு ரூ.13,98,700/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலா் திரு.கோ.சிவருத்ரய்யா அவர்கள் வழங்கினார்கள்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (17.10.2022) மாவட்ட வருவாய் அலுவலா் திரு.கோ.சிவருத்ரய்யா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையத்தில் பிரதி திங்கட்கிழமை தோறும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்கள் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கி தீர்வு காணப்பட்டு வருகிறது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து 420 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அரசு துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள்.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் துறையின் சார்பில், 22 பயனாளிகளுக்கு மூன்று சக்கர வண்டியும், 42 பயனாளிகளுக்கு சக்கர நாற்காலியும், 28 பயனாளிகளுக்கு காதுக்கு பின்புறம் அணியும் காதொலிக் கருவியும், 48 பயனாளிகளுக்கு AUXILLARY CRUTCHES-யும், 12 பயனாளிகளுக்கு ELBOW CRUTCHES- யும், 23 பயனாளிகளுக்கு CALIBER - யும் மற்றும் 19 பயனாளிகளுக்கு செயற்கைக்கால்களும் மாவட்ட வருவாய் அலுவலா் அவர்கள் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.புண்ணியகோட்டி, துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திருமதி.சுமதி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.சரவணகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments
Thank you for your comments