வாள்வீச்சில் வாகை சூடிய வாலாஜாபாத் அகத்தியா பள்ளி
வாள்வீச்சில் வாகை சூடிய வாலாஜாபாத் அகத்தியா பள்ளி 2022 -23 ஆம் கல்வி ஆண்டிற்கான பாரதியார் தின குடியரசு தின விழா விளையாட்டு போட்டிகள் காஞ்சிபுரம் மாவட்ட அளவில் நடைபெற்று வருகிறது.
இதில் நடத்தப்பட்ட வாள்வீச்சு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற வாலாஜாபாத் அகத்தியா மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவ மாணவியர் மட்டும் 40 பதக்கங்களை பெற்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.
தனிநபர் பிரிவுகளில் 5 தங்கம், 5 வெள்ளி, 7 வெண்கலம் என 17 பதக்கங்களும், குழு பிரிவுகளில் 13 தங்கம், 3 வெள்ளி, 7 வெண்கலம் என 23 பதக்கங்களும் ஆக மொத்தம் 40 பதக்கங்களை வாலாஜாபாத் அகத்தியா மெட்ரிக் பள்ளி மாணவ மாணவியர் தட்டிச் சென்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பயிற்சியாளருக்கும் பாராட்டுக்களை பள்ளி நிர்வாகி சாந்தி அஜய்குமார் தெரிவித்தார்.
மேலும் தனிநபர் பிரிவில் பதக்கங்களை பெற்ற வாலாஜாபாத் அகத்தியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 17 மாணவ மாணவியர் அடுத்து நடைபெறவுள்ள மாநில அளவிலான போட்டிகலும் பங்கேற்கவுள்ளனர்.

No comments
Thank you for your comments