கனிமவளத்துறை அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம்
காஞ்சிபுரம்
- கல்குவாரிகளில் இருந்து ஏற்றி செல்லும் கனிம வளங்களுக்கு கையால் எழுதும் ரசீது வழங்காமல், கம்ப்யூட்டர் ரசீது வழங்க கோரி லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர், காஞ்சிபுரம் கனிமவளத்துறை அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம்.
- காஞ்சிபுரம் மாவட்டத்தில் கனிம வள கொள்ளையை தடுக்க கம்ப்யூட்டர் ரசீது வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் கல் குவாரிகளில் இருந்து ஜல்லி எம் சாண்ட் உள்ளிட்ட கனிம வள பொருட்களை லாரிகளில் எடுத்துச் செல்வதற்கு கையால் எழுதும் ரசீது வழங்கப்படுவதை கண்டித்தும் கனிம வளக் கொள்ளையை தடுக்கும் வகையில் கம்ப்யூட்டர் ரசீது வழங்கிட கோரியும் லாரி உரிமையாளர்கள் சங்க மாநிலத் தலைவர் யுவராஜ் தலைமையில் 50க்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள புவியியல் மற்றும் சுரங்கத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய லாரி உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் யுவராஜ்,
தமிழகத்தில் மலைகள் உடைக்கப்படுவதில் கனிம வளங்களை எடுத்துச் செல்ல கையால் எழுதும் ரசீது போடப்படுவதாகவும் அதன் காரணமாக நூறு லோடுக்கு பில் போட்டுவிட்டு ஆயிரம் லோடு வரை எடுத்துச் செல்லப்படுவதாகவும் இதன் காரணமாக லாரிகளில் அதிக பாரம் ஏற்ற வற்புறுத்தப்படுவதாகவும், லாரிகள் பழுதடைவதாகவும்,காப்பீடு தொகைகள் பெற முடியாமல் போவதாகவும், சாலைகளில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும், அதனால் கல் குவாரிகளில் இருந்து கனிம வளங்களை எடுத்துச் செல்லும் பொழுது கையால் எழுதும் ரசீது வழங்காமல், கம்ப்யூட்டர் ரசீது வழங்கிட வேண்டும் என கோரிக்கை விடுத்து காஞ்சிபுரம் புவியியல் சுரங்கத்துறை அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் வரும் காலங்களில் கனிமவள கொள்ளையை தடுக்க கையால் எழுதும் ரசீது வழங்குவதை நிறுத்திவிட்டு கம்ப்யூட்டர் வழியில் ரசீது வழங்கிட மாவட்ட ஆட்சி தலைவர் ஆவண செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்து வதற்காக லாரி உரிமையாளர் சங்க மாநில தலைவர் யுவராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


No comments
Thank you for your comments