Breaking News

மேயரின் கணவர் தலையீட்டால் கொந்தளித்த பொதுமக்கள்

  • சாலையில் கடந்த 20 நாட்களாக வழிந்தோடும் கழிவுநீரை கண்டுகொள்ளாத மாநகராட்சி நிர்வாகம்
  • அரசு மருத்துவமனை அமைந்துள்ள ரயில்வே சாலையில் அமர்ந்து 50-க்கும் மேற்பட்டோர் சாலைமறியல்
  • மேயரின் கணவர் தலையீட்டால் பொதுமக்கள் கொந்தளிப்பு


காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட கோட்டை கொள்ளை சுப்புராயன் தெரு பகுதியில் கடந்த 20 நாட்களாக புதை வடிகால் இனப்பின் அடைப்பு ஏற்பட்டு தொடர்ந்து கழிவுநீரானது அத்தெருவில் வெள்ளம் போல் சென்று கொண்டிருக்கிறது.


இந்நிலையில் இது குறித்து மாநகராட்சி நிர்வாகத்திற்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறி அப்பகுதி மக்கள் ஹாஸ்பிடல் ரோடு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  இதனால் அப்பகுதியில் பதட்டம் நிலவியது. 


இந்நிலையில்,  விஷ்ணு காஞ்சி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதற்கு வழிவகுப்பததாக தெரிவித்ததன் பேரில் மறியலை கைவிட்டனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு கழிவுநீர் அடைப்பு நீக்கும் லாரிகள் வரவழைக்கப்பட்ட நிலையில் சம்பந்தபட்ட இடத்திற்கு மாநகராட்சி ஆணையரோ மேயரோ நேரில் வராமல் இங்கிருந்து கலைய மாட்டோம் எனவும் தொடர்ந்து இப்பிரச்சனை 20 ஆண்டுகளாக இருந்து வருவதாகவும் தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

அதனைதொடர்ந்து மேயரின் கணவர் யுவராஜ் அப்பகுதியை சேர்ந்த ஒருவரை தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறிய நிலையில் மேயரை பேசமால் நீங்கள் எதற்காக என்னை தொடர்பு கொள்கிறீர்கள் என பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டு அழைப்பு துண்டித்த சில நிமிடங்களிலேயே மேயர் மகாலட்சுமி அவரது தொடர்பில் வந்து நேரில் வருவதாக உறுதியளித்தார். 

பின்னர் வந்த அவர் அப்பகுதியை பார்வையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பதாகவும் நிரந்தர தீர்வுக்காக 2 நாட்கள் கால அவகாசமும் கேட்டதன் பெயரில் அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர்.

No comments

Thank you for your comments