Breaking News

பேருந்து நிலையத்தில் வாடகை பாக்கி நிலுவையில் உள்ள கடைகளுக்கு சீல் வைப்பு.

  • காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் வாடகை பாக்கி நிலுவையில் உள்ள கடைகளுக்கு சீல் வைப்பு.
  • காஞ்சிபுரம் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை.

காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான 104 கடைகளுக்கு, கடை உரிமையாளர்கள் வாடகை 3 கோடிக்கும் மேல் செலுத்தாமல் நிலுவை வைத்துள்ள காரணத்தால்  மாநகராட்சி நிர்வாகம் பலமுறை அறிவிப்பு கடிதம் வழங்கியும் வாடகை செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.



இந்நிலையில் பல கோடி ரூபாய் வாடகை நிலுவையில் உள்ள நிலையில், வாடகை வசூலை தீவிரப்படுத்தும் நடவடிக்கையாக பேருந்து நிலையத்தில் அதிக வாடகை பாக்கி வைத்துள்ள கடைகளை பூட்டி சீல் வைக்கும் பணியினை மாநகராட்சி வருவாய் அலுவலர் தமிழரசு தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.




இதன் காரணமாக மாநகராட்சி அதிகாரிகளுக்கும் கடை உரிமையாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டு வருகிறது.



No comments

Thank you for your comments