தேசிய குடற்புழு நீக்க நாள் - சிறப்பு முகாம் அறிவிப்பு
விடுபட்ட குழந்தைகள், மாணவர்கள் மற்றும் 20 முதல் 30 வயது வரை உள்ள பெண்களுக்கு சிறப்பு முகாம் 16.09.2022 (வெள்ளிக்கிழமை) அன்று நடைபெறுகிறது.
தேசிய குடற்புழு நீக்க நாள் 09.09.2022 அன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ளது. இதன்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து 1 முதல் 19 வயது வரை உள்ள 3,81,186 குழந்தைகள், மாணவர்கள் மற்றும் 20 முதல் 30 வயது வரை உள்ள 83,997 பெண்களுக்கு (கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தவிர) அல்பென்டசோல் என்ற மாத்திரை வழங்கப்பட உள்ளது.
இதன்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அனைத்து பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் உள்ள மொத்த குழந்தைகள், மாணவர்கள் மற்றும் பெண்களுக்கு சுகாதார துறை, குழந்தை வளர்ச்சி துறை, சமூக வளர்ச்சி துறை மற்றும் பள்ளிக் கல்வி துறை பணியாளர்கள் மூலம் அளிக்கப்பட உள்ளது. விடுபட்ட குழந்தைகள், மாணவர்கள் மற்றும் பெண்களுக்கு வரும் 16.09.2022 அன்று அல்பெண்டசோல் மாத்திரை அளிக்கப்பட உள்ளது.
இம்மாவட்டத்தில் உள்ள 1 முதல் 2 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கு அல்பென்டசோல் தலா 1/2 (200 mg) மாத்திரை மற்றும் 2 முதல் 19 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகள், மாணவர்கள் மற்றும் பெண்களுக்கு தலா 1 (400 mg) மாத்திரை வழங்கப்படுகிறது.
இதன் மூலம் ஒட்டு மொத்த குடற்புழுக்களை நீக்கி குழந்தைகள் ஆரோக்கியத்தை பேணிக்காக்க மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களும் தகுந்த ஒத்துழைப்பு நல்கி அனைவரும் மேற்கண்ட நாளில் குடற்புழு மாத்திரைகளை உட்கொள்ளுமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments
Thank you for your comments